போகர் சப்தகாண்டம் 6551 - 6555 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6551 - 6555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6551. சொல்லவென்றால் புலிப்பாணி சொகுசுள்ளானே சுந்தரனே இந்திரனே சுகுணமாரா
புல்லறிவால் உந்தனுக்குப் புகட்டுவோம்யாம் புகழான செம்பினிட சுத்திதன்னை
வெல்லவே செம்பதுவும் பலமொன்றாகும் வேகமுள்ள வீரமது பலமொன்றாகும்
சொல்லவே காரமது பலமொன்றாகும் செயலான நிமிளையது பலமொன்றாமே 

விளக்கவுரை :


6552. ஒன்றான சாரமது பலமொன்றாகும் வுத்தமனே கெவுரியது பலமொன்றாகும்
வென்றிடவே துருசதுவும் பலமொன்றாகும் வேகமுள்ள சீனமது பலமொன்றாகும்
நன்றான லிங்கமது பலமொன்றாகும் நலமான வெடியுப்பு பலமொன்றாகும்
மன்றான கரியுப்பு பலமொன்றாகும் பாலகனே இதுகளெல்லாம் ஒன்றாய்க்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

6553. கூட்டவே சரக்கெல்லாம் கல்வமிட்டு குமுறவே பொடியாக்கி மைந்தாகேளு
நாட்டமுடன் செம்புதனை குகையிலிட்டு நலமாகத் தானுருக்கிக் கிராசமீவாய்
வாட்டமுடன் கிராசமது கொடுக்கும்போது வளமான செம்பதுவும் ஊறலேகி
நீட்டமுடன் தங்கமென்ற செம்புபோலாம் நிதியான செம்புதனை பதனம்பண்ணே

விளக்கவுரை :


6554. பண்ணவே செம்பெடுத்து மைந்தாகேளு பாங்குபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று
தண்ணமுடன் கொடுத்துருக்கி மாற்றைப்பாரு தாக்கான வயததுவும் சத்தமாகும்
திண்ணமுடன் சுயத்தங்கம் பிறவித்தங்கம் தீர்க்கமுடன் தங்கமதின் பசுமையாகும்
உண்ணவே சீவனத்துக் கிடம்வேறுண்டோ வுத்தமனே நாதாக்கள் செம்புதானே

விளக்கவுரை :


6555. தானான வெள்ளிதனில் பத்துக்கொன்று தண்மையுடன் தங்கமது ஒன்றுசேர்த்து
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே தானுருக்கி வாரடித்து
பானான புடமதுவும் தீர்ந்துதானால் பாலகனே மாற்றதுவும் எட்டதாகும்
மானான மனோன்மணியாள் கடாட்சத்தாலே மன்னவனே செம்பினுட வேதைகாணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar