போகர் சப்தகாண்டம் 6456 - 6460 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6456 - 6460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6456. தானான புலிப்பாணி மைந்தாகேளு தண்மையுள்ள நல்லோருந் தீங்கோருண்டு
கோனான குருக்கள் மார்யோகிமாண்பர் கொற்றவனே ஜெகதலத்தில் மெத்தவுண்டு
தேனான வார்த்தையது மிகவுஞ்சொல்வார் தெள்ளமுர்தமானதொரு நேசஞ்செய்வார்
பானான சீடன்மேல் பட்சம்வைத்து பகட்டுவார் மெய்பகட்டு வதிகம்பாரே

விளக்கவுரை :


6457. பாரப்பா லோகமென்ற மாரணத்தை பக்குவமாய் பகருகிறேன் மன்னாகேளு
ஆரப்பா லோகமாரணத்தைச் சொன்னார் வப்பனே சொன்னவர்கள் மறைத்துச் சொன்னார்
நேரப்பா யுந்தனுக்கு சிடிகைவேதை நேர்மையுடன் நானுரைப்பேன் நீதியாக
கூரப்பா செம்பதுவும் பத்தேயாகும் குறிப்பான வெள்ளியது ரெண்டுதானே

விளக்கவுரை :

[ads-post]

6458. தானான நாகமது ஒன்றேயாகும் தாக்குடனே பதின்மூன்றும் ஒன்றாய்க்கூட்டி
தேனான செம்பதனை யூதிப்போடு தேற்றமுடன் சுத்தித்த செம்புதன்னை
மானான செம்புதனைப் பதனம்பண்ணு மகத்தான போகும்கை வரிசைகேளு
கோனான தங்கமது ஒன்றேயாகும் குறிப்பான வெள்ளியது ஒன்றுகாணே

விளக்கவுரை :


6459. காணவே நாகமது ஒன்றேயாகும் கனமான சூதமது ஒன்றேயாகும்
தோணவே முன்னுரைத்த செம்புதன்னில் தோறாமல் ஓரிடைத்தான் எடுத்துக்கொண்டு
பூணவே மூவகை ஜெயநீராலே புகழாகத் தானரைப்பாய் சாமமப்பா   
மாணவே சரக்கெல்லா மறைத்தபின்பு மார்க்கமுடன் மாத்திரைகள் ஐந்துபாரே

விளக்கவுரை :


6460. செய்யவே வெள்ளிதனில் பத்துக்கொன்று செம்மலுடன் தானுருக்கி குருதானொன்று
பையவே கண்விட்டு ஆடும்போது பாகமுடன் தானுருக்கி குருவொன்றீய
துய்யதொரு வெள்ளியது மாற்றாறாகும் துப்புரவாய்ப் பசுமையது சொல்லப்போமோ
மெய்யான வித்தையது யேமவித்தை மேதினியில் செய்வர்களில்லைதானே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar