Showing posts with label போகர் சப்தகாண்டம். Show all posts



போகர் சப்தகாண்டம் 6996 - 7000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6996. பாரமாம் எந்நூலிற் துகளுண்டானால் பாலகனே சிக்கறுத்து மனங்களித்து
தூரான வார்த்தையது மிகக்கொள்ளாமல் துப்புரவாய்ச் செந்தமிழைச் சீர்திருத்தி
கூறான விதிபாடு முறைபாடோடு குணபாடு வழிபாடு தானமர்த்தி
சீறான போகரேழாயிரத்தை சிறப்புடனே யுகந்துமனங் கொள்வீர்தாமே

விளக்கவுரை :


6997. தாமான சித்துமுனி ரிஷியார்முன்னே தகமையுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
ஆமேதான் பசுபசுங்கிள்ளைமுன்னே வப்பனே யருங்காக்கை சத்தம்போலும்
வேமேதான் செந்தமிழாற் சித்தர்முன்னே வேட்கையுடன் யான்செய்த சத்தகாண்டம்
தாமேதான் புல்லறிவா லுரைத்ததாலே தண்மையுடன் பெரியோர் புன்னகையுமாமே

விளக்கவுரை :

[ads-post]

6998. நகையான போகரேழாயிரந்தான் நலமான சித்தர்முனி நாதருக்கு
தகமையுள்ள காண்டமது பெருமையோசொல் தாரணியில் அனேகம்பேர் சித்தர்கூடி
குகைதனிலே வெகுநூல்கள் பாடியல்லோ கொற்றவனே சமாதிமுகம் வைத்தாரப்பா
வகையான சாத்திரத்துக் கொப்புசொல்ல வல்லவனே எந்நாளும் முடியாதன்றே

விளக்கவுரை :


6999. அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே வினவிடவும் போகாதப்பா
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கொட்டினார் சித்தரெல்லாம் லக்கோயில்லை
வென்றிடவே கும்பமுனி வர்க்கத்தோரும் வேதாந்த திருமூல வர்க்கத்தோரும்
நன்றாகப் பாடிவைத்தார் கோடிநூல்கள் நலமாகப் பாடிவைத்தேன் இந்நூலாமே

விளக்கவுரை :


7000. சின்னூலாம் என்றதொரு இந்தநூலை சினமதுவுங் கொள்ளாமல் மனதுவந்து
பன்னூலும் பெருநூலாயிருந்திட்டாலும் பட்சமுடன் மனங்களித்து வாசீர்மித்து
என்னூலைக் குற்றமது கூறாமற்றான் எழிலான சிறியேன்மேல் அன்புகூர்ந்து
நன்னூலா யிதம்பூண்டு யின்னூல்தன்னை நன்மையுடன் அனுசரித்து கொள்ளநன்றே

விளக்கவுரை :


7001. கொள்ளவே போகரேழாயிரந்தான் கொற்றவனே நெடுங்காலந் தவமிருந்து
உள்ளபடி யுடல்பொருள்கள் ஆவியெல்லாம் வுத்தமனே இந்நூலுக்கொப்பிவைத்தேன்
கள்ளமிலா சாத்திரமாம் சத்தகாண்டம் கலியுகத்தார் தான்பிழைக்க பாடிவைத்தேன்
உள்ளபடி சாபமது இந்நூற்கில்லை வுத்தமனே காண்டமது யேழுதானே

விளக்கவுரை :


7002. தானான காண்டமது ஏழுக்குள்ளே சதகோடி சூரியன்போல் மகத்துவங்கள்
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே பெருநூலாம் குருநூலாக
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேஜொளிவின் சின்மயத்தின் அருளினாலும்
மானான போகரேழாயிரந்தான் மார்க்கமுடன் பெருநூலும் முற்றதாமே

விளக்கவுரை :





போகர் சப்தகாண்டம் 6991 - 6995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6991. தானான புலஸ்தியர்க்கு சரணஞ்சொன்னேன் தாக்கான வால்மீகர் பாதம்போற்றி
கோனான சுப்பிரமணியர் சரணஞ்சொன்னேன் கூரான வவர்பாதந் தொழுதுபோற்றி
தேனான ஜெயகண்டி பாதம்போற்றி செங்கமல வள்ளுவனார் சரணஞ்சொன்னேன்
மானான மகதேவர் காலதூதர் மகத்தான பாதமது பணிந்திட்டேனே

விளக்கவுரை :


6992. இட்டேனே நவகோடி ரிஷியாருக்கு எழிலான பதினெண்பேர் சித்தருக்கும் 
சட்டமுடன் நாற்பத்தி எட்டுபேர்கள் சதுரான முனிவருக்கு சரணஞ்சொன்னேன்
திட்டமுடன் மனோன்மணியாள் பாதம்போற்றி திகழான சுடரொளியாஞ் சோதிபோற்றி
அட்டதிசை தான்புகழுங் காலாங்கிநாதர் வையனே யுன்பாதம் போற்றிதானே

விளக்கவுரை :

[ads-post]

6993. தானான சித்துமகா ரிஷியாருக்கு தண்மையுள்ள மனுவொன்று சொல்வேனப்பா
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சீனபதி தேசந்தன்னில்
மானான வையகத்து மகிமையெல்லாம் மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
பானான சதகோடி சூரியன்போல் பாடினேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


6994. பண்பான லோகவதிசயங்களெல்லாம் பாருலகில் நாதாக்கள் மறைத்ததாலே
நண்பான மாண்பர்களும் பிழைக்கவேதான் நலமான புலிப்பாணி பாலனுக்கு
திண்ணமுடன் இதிகாசவித்தையெல்லாம் தீர்க்கமுடன் சத்தசாகரத்தைப்போலே
உண்மையாம் போகரேழாயிரந்தான் வுகமையுடன் பாடிவைத்தேன் காண்டம்பாரே

விளக்கவுரை :


6995. பாரேதான் மகுத்துவங்கள் வெளியாச்சென்று பண்புள்ள நாதாக்கள் நீங்களெல்லாம்
வேரேதான் கோபமது கொள்ளாமற்றான் வேழ்க்கமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சிறுபாலன் என்னையுந்தான் சிறப்புடனே மனதுவந்து வஞ்சலித்து
நேரேதான் என்மீதிற் சினங்கொள்ளாமல் நேர்மையுடன் கொண்டணைத்தல் பாரமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 6986 - 6990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6986. வணங்கவே இன்னம்வெகு சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா
இணங்கினேன் ஜமதக்னி முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
சுணங்கமது வாராமல் ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
மணங்கமழுந் திரணாக்கிய முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே

விளக்கவுரை :


6987. தொழுதேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த
பழுதுபடா புலிப்பாணி பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு
முழுதுமே மூதுலகில் கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு
தொழுதுமே யவர்பாதம் போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே

விளக்கவுரை :

[ads-post]

6988. பகரவே புஜண்டமகா ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன்
நிகரவே யவர்பாதந்தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாய்த்தேன்
சகராஜபரிட்சித்து மன்னனுக்கு சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த
சுகரென்ற ரிஷியார்க்குச் சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் பணிந்திட்டேனே

விளக்கவுரை :


6989. பணிந்தேனே பலிப்பாணி மன்னவாகேள் பாருலகில் கும்பமென்ற யீசருக்கு
துணிந்துமே யவர்பாதந் தொழுதுபோற்றி துப்புரவாய் சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
கணிதமென்ற மூலத்தின் ஈசருக்கு கனகாபிஷேகமுடன் சரணஞ்சொன்னேன்
மணிபோன்ற பாதமதைத் தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே

விளக்கவுரை :


6990. காணவே கருவூரார் சித்தருக்கு கனகாபிஷேகமது மிகவுஞ்செய்து
தோணவே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் போற்றிபோற்றி
மாணமருங் கல்வியுள்ள கொங்கணர்க்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
நீணவே வாலையா னந்தருக்கு நீதியுடன் பாதமது பணிந்தேன்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 6981 - 6985 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6981. செய்தேனே யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி செல்லவானே
துய்யநல்ல வூர்வசியாள் சரணஞ்சொன்னேன் துப்புரவாய் என்மீதிற் கடாட்சம்வைத்து
வெய்யபுகழ் காலாங்கி கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து
தையலெனும் வூர்வசியாள் கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே

விளக்கவுரை :


6982. பாடினேன் புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே வியாசமுனி நாதருக்கு
தேடியே யவர்பாதந் தொழுதேனப்பா தேற்றமுடன் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கூடியே கௌதமரிஷியாரின்தன் கொற்றவனே யவர்பாதந் தொழுதுபோற்றி
நீடியே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து நீதியுடன் அவர்பதத்தை பணிந்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

6983. இட்டேனே திருமூலர் சரணஞ்சொன்னேன் எழிலுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சட்டமுடன் பாம்பாட்டி சித்தருக்கு சதகோடி நமஸ்காரம் செய்தேன்யானும்
திட்டமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி தீர்க்கமுடன் மேலுமஞ்சலிகள் செய்தேன்
பட்டமுடன் கடுவெளியார் சித்தருக்கு பாலகனே நமஸ்காரஞ் செய்தேன்பாரே

விளக்கவுரை :


6984. பாரேதான் கமலமென்ற முனியாருக்கு பட்சமுடன் சதகோடி சரணஞ்சொன்னேன்
சீரேதான் அவர்பாதந் தொழுதுபோற்றி சிறப்புடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
நேரேதான் கைலாச ரிஷியாருக்கு நேர்மையுடன் அவர்பாதந்தொழுதுபோற்றி
கூரேதான் நமஸ்காரம் மிகவுஞ்சொன்னேன் கொற்றவனே புலிப்பாணி பண்புள்ளானே

விளக்கவுரை :


6985. பண்பான வஞ்சனமாம் ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
நண்புடனே தான்பணிந்து முடிகள்சாய்த்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
வண்பான நவகண்டர் பாதம்போற்றி வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன்
திண்பான வஞ்சலிகள் மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே

விளக்கவுரை :


Powered by Blogger.