6991. தானான புலஸ்தியர்க்கு
சரணஞ்சொன்னேன் தாக்கான வால்மீகர் பாதம்போற்றி
கோனான சுப்பிரமணியர்
சரணஞ்சொன்னேன் கூரான வவர்பாதந் தொழுதுபோற்றி
தேனான ஜெயகண்டி பாதம்போற்றி
செங்கமல வள்ளுவனார் சரணஞ்சொன்னேன்
மானான மகதேவர் காலதூதர்
மகத்தான பாதமது பணிந்திட்டேனே
விளக்கவுரை :
6992. இட்டேனே நவகோடி ரிஷியாருக்கு
எழிலான பதினெண்பேர் சித்தருக்கும்
சட்டமுடன் நாற்பத்தி
எட்டுபேர்கள் சதுரான முனிவருக்கு சரணஞ்சொன்னேன்
திட்டமுடன் மனோன்மணியாள்
பாதம்போற்றி திகழான சுடரொளியாஞ் சோதிபோற்றி
அட்டதிசை தான்புகழுங்
காலாங்கிநாதர் வையனே யுன்பாதம் போற்றிதானே
விளக்கவுரை :
[ads-post]
6993. தானான சித்துமகா
ரிஷியாருக்கு தண்மையுள்ள மனுவொன்று சொல்வேனப்பா
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் சீனபதி தேசந்தன்னில்
மானான வையகத்து
மகிமையெல்லாம் மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
பானான சதகோடி சூரியன்போல்
பாடினேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
6994. பண்பான லோகவதிசயங்களெல்லாம்
பாருலகில் நாதாக்கள் மறைத்ததாலே
நண்பான மாண்பர்களும்
பிழைக்கவேதான் நலமான புலிப்பாணி பாலனுக்கு
திண்ணமுடன்
இதிகாசவித்தையெல்லாம் தீர்க்கமுடன் சத்தசாகரத்தைப்போலே
உண்மையாம் போகரேழாயிரந்தான்
வுகமையுடன் பாடிவைத்தேன் காண்டம்பாரே
விளக்கவுரை :
6995. பாரேதான் மகுத்துவங்கள்
வெளியாச்சென்று பண்புள்ள நாதாக்கள் நீங்களெல்லாம்
வேரேதான் கோபமது
கொள்ளாமற்றான் வேழ்க்கமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சிறுபாலன்
என்னையுந்தான் சிறப்புடனே மனதுவந்து வஞ்சலித்து
நேரேதான் என்மீதிற்
சினங்கொள்ளாமல் நேர்மையுடன் கொண்டணைத்தல் பாரமாமே
விளக்கவுரை :