6941. தானான தீர்த்தமது என்னசொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி தம்பிரானே
மானான தாமரையின்
தீர்த்தங்கண்டேன் மகத்தான ஞானமென்ற தீர்த்தங்கண்டேன்
வேனான யாதவமாந்
தீர்த்தங்கண்டேன் வெளியான வமுர்தமென்ற தீர்த்தங் கண்டேன்
பானான வசுவனியாந் தீர்த்தங்கண்டேன்
பாங்கான வற்புதமாம் தீர்த்தமாமே
விளக்கவுரை :
6942. ஆமேதான் புலிப்பாணி
யன்புள்ளானே வப்பனே வனாகதத்தின் தீர்த்தங்கண்டேன்
நாமேதான் காலாங்கி
நாதர்தம்மால் நலமான குளிகையது பூண்டுகொண்டு
தாமேதான் காலாங்கி சொன்னநீதி
தண்மையுடன் வாக்கதுவும் செய்யாமற்றான்
போமேதான் அஷ்டதிசையான்கடந்து
பொங்கமுடன் தீர்த்தமதைக் கண்டிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6943. கண்டேனே வெகுகோடி
தீர்த்தந்தன்னை காசினியில் ஆர்கண்டார் என்னைப்போல
உண்டான சித்துமுனி
ரிஷிகள்தேவர் வுலகமெலாம் குளிகைகொண்டு சென்றதுண்டே
ஒண்டொடியாய் மரம்பொந்து
சமாதிபீடம் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
சண்டமாருதம்போலே
குளிகைபூண்டு சட்டமுடன் அஷ்டதிசை கண்டிட்டேனே
விளக்கவுரை :
6944. இட்டேனே இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் யெளிதான நாதாந்த சித்துதாமும்
பட்டமாம் விட்டலவோ
பாரின்மீது பாருலகில் அதிசயத்தைக் கண்டிதில்லை
விட்டகுறை இருந்ததொரு
புண்ணியத்தால் வேதாந்தத் தாயினது மகத்துவத்தால்
சட்டமுடன் வையகத்து
மகிமையெல்லாம் தாரணியில் கண்டறிந்த மகிமைபாரே
விளக்கவுரை :
6945. புதுமையாம் வெகுகோடி
சித்தர்தாமும் புகழான வுலகுதனில் கோடாகோடி
கதுமையுள்ள தேவரிஷி
இருந்தாரல்லோ காசினியில் அதிசயங்கள் கண்டேனென்றும்
பதுமைமுகம் அஷ்டதிக்கு
பரிசம்யாவும் பார்த்துவந்த வுறுதியதும் கூறவில்லை
வதுவைபுரி சுரக்காயங்
கரிக்காயென்ற வார்த்தையது போலலைவாய் நவின்றிட்டாரே
விளக்கவுரை :