போகர் சப்தகாண்டம் 6541 - 6545 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6541 - 6545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6541. நாணவே யின்னமொரு போக்கு சொல்வேன் கருவான புலிப்பாணி மகனேகேளு
தோணவே செம்பதுவுஞ் சேர்தானொன்று செப்புகிறேன் செம்புதனை மூசையிட்டு
வேணபடி சரக்குவகை சொல்வேனப்பா வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
பானமெனும் வெடியுப்பு பலந்தானொன்று பாங்குபெற துருசதுவும் பலந்தானொன்றே

விளக்கவுரை :


6542. ஒன்றான வளையுப்பு பலந்தானொன்று வுத்தமனே சாரமது பலந்தானைந்து 
குன்றான வீரமது பலந்தான்ரெண்டு குறையாமல் கல்லுப்பு பலந்தான்ரெண்டு
வென்றிடவே அன்னமென்ற பேதியப்பா வேகமுடன் யண்டோடு தானுஞ்சேர்த்து
சென்றுமே பொடியாக்கி திரள்வேந்தேகேள் செப்புகிறேன் கைவரிசை முறைமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

6543. முறையான சரக்கெல்லாம் ஒன்றாய்க் கூட்டி வுத்தமனே கல்வமதில் பொடியதாக்கி
குறையாமல் செம்புதனை யுருக்கி மைந்தா குணம்பெறவே நயம்பெறவே கிராசமீவாய்
திறையகற்று செம்பதுவும் இருளுமேகி தீர்த்தமுடன் சிவந்துமல்லோ யின்னம்பாரு
துறையான செம்பதனை எடுத்துமைந்தா துகளகற்றி வூதியெடு சுத்தியாச்சே

விளக்கவுரை :


6544. சுத்தியாஞ் செப்புதனையெடுத்துபாரு சுந்தரனே யாறுவகை ஜெயநீர்தன்னால்
வெற்றிபெற தானுருக்கிக் காய்ப்பாயப்பா வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
சத்தியமாய் வூறலது யேகியல்லோ சண்முகனார் பூசைக்கு ஏற்றமாச்சு
அத்திபுரந் தானெரித்த வாலங்காடர் வப்பனே தானணியுஞ் செம்புமாச்சே

விளக்கவுரை :


6545. செம்பான செம்புதனை பதனம்பண்ணு செயலான முத்தியமும் பெறுவாயப்பா
கும்பமுனி சாத்திரத்தில் அனேகஞ்செம்பு கூறினார் பன்னீராயிரத்திலப்பா
நம்பியல்லோ செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி நாதாந்த சித்துமுனி சாத்திரத்தில்
அம்பொன்னாஞ் செம்பொன்னின் வினோதவித்தை வப்பனே கோடிதறை சூட்டினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar