6526. போடவே ரவிதனிலே காய்ந்தபின்பு பொங்கமுடன் மண்மறைவிற் புடத்தைப்போடு
தேடவே தீயாறி எடுத்துப்பாரு
தெளிவுடனே கவசமது இறுகியல்லோ
மூடவே கவசமதை யுடைத்துமைந்தா
வுத்தமனே பார்க்குமந்த வேளைதன்னில்
கூடவே மண்ணாகஞ் செம்புதானும்
குணமான சூதமதை இறுகலாச்சே
விளக்கவுரை :
6527. ஆச்சப்பா சூதமது மணியுமாச்சு
வப்பனே சாரணைகள் இன்னஞ்சொல்வேன்
மூச்சடங்கி நெடுங்கால
மிருப்பதற்கு முனையான சூதமதை மணியேசெய்தால்
பாச்சலுடன் நெடுந்தூரம்
நடக்கலாகும் பாங்கான குளிகையது கீழ்நோக்காது
வீச்சுடனே கிருஷ்ணாவதாரனப்பா
விண்ணுலகில் ஆடியதோர் குளிகையாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6528. குளிகைக்கு சாரணைகள்
என்னவென்றால் கொற்றவனே ஊமத்தங்காய்கள்தன்னை
நளினமுடன் தானரைத்துக்
கவசஞ்செய்து நலமுடனே சீலையது வலுவாய்ச்செய்து
பளிதமது வாறாதுபாலாகேளு
பாங்குபெற மண்மறைவிற் புடத்தைப்போடு
வனிதமுடன் கவசமது
நீக்கிமைந்தா வளமையுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
6529. செப்பவென்றால் குளிகையது
என்னசொல்வேன் செம்மலுடன் போகும்வகை முறைமைகேளு
ஒப்பமுடன் குளிகைதனை
எடுத்துமைந்தா ஓகோகோ நாதாக்கள் செய்யும்வண்ணம்
தப்பிதங்கள் வாராமல்
தவளைச்சங்கு சாங்கமுடன் தானிடித்து மாவதாக்கி
இப்புவியில் சித்துவிளையாடுதற்கு
எழிலான சாரணைகள் சொல்வேன்பாரே
விளக்கவுரை :
6530. சொல்லவென்றால் சாரணைகள்
நிம்பழத்தால் சுத்தமுடன் தானரைத்து மைபோலாக்கி
வெல்லவே சூதமென்ற கட்டியப்பா
வேகமுடன் தானரைத்துக் கவசஞ்செய்து
புல்லவே ரவிதனிலே காயவைத்து
புகழான மண்மறைவிற் புடத்தைப்போடு
வெல்லவே புடமாறி
எடுத்துப்பாரு வேதாந்தத் தாயினது கடாட்சந்தானே
விளக்கவுரை :