6531. தானான புடமதுவும்
கவசம்நீங்கி தண்மையுள்ள மணிதனையே எடுத்துமைந்தா
பானான சக்கினிட சுண்ணந்தன்னை
பார்த்திபனே தானெடுத்து மைபோலாட்டி
கோனான குருசொன்ன நீதிபோலே
கொற்றவனே கைமுறைகள் பிசகாமற்றான்
ஊனான சங்குதனைக் கவசஞ்செய்து
வுத்தமனே புடம்நூறு போட்டிடாயே
விளக்கவுரை :
6532. புடமதுவுஞ் சதமென்றால்
நூறுபோடு புகழான ரசமணியுங் கட்டும்பாரு
தடமதுவும் நடப்பதற்கு இதுவே
சித்தி தண்மையுள்ள சூதமது குளிகையாச்சு
மடந்தனிலே தானிருக்கும்
சிவயோகிக்கு மகத்தான குளிகையது கிட்டிற்றானால்
நடராஜ சுந்தரனார் கிருபையாலே
நாதாந்த சித்துவெனச் செப்பலாமே
விளக்கவுரை :
[ads-post]
6533. சித்தான சித்துகளும்
இவர்க்கீடுண்டோ சிறப்பான நாதாக்கள் கண்டதில்லை
வெற்றியுடன் அஷ்டசித்து இதனாலாகும்
வேதாந்தத்தாயாரும் பிசங்கிப்பாள்
முத்திபெற மோட்சவழி
காணலாகும் முனையான சிவயோகி இவர்தானென்பார்
சத்தியங்கள் தவறாமல்
குளிகைகொண்டு சட்டமுடன் நடப்பவனே சித்தன்பாரே
விளக்கவுரை :
6534. பாரேதான் குளிகையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலகனே
நேரேதான் சாத்திரங்கள்
உளவாராய்ந்து நேர்மையுடன் மாண்பர்களுக் ஆகாவென்று
சீரேதான் குளிகைதனை
முடித்துமல்லோ சிறப்புடனே யஷ்டசித்து யாராலாகும்
ஆரோதான் உந்தமக்கு
போதிப்பாரே வப்பனே யுந்தமக்கு வருள்செய்வேனே
விளக்கவுரை :
6535. அருளான வருளிதுவும்
என்னவென்றால் வப்பனே முன்செய்தபுண்ணியத்தால்
பொருளான சூதமென்ற மணிதானப்பா
புண்ணியனே யுந்தமக்கு கிட்டலாச்சு
இருளான பவக்கடலை விட்டகற்றி
எழிலான தவக்கடலை யேகியல்லோ
மருளான ஞானமென்ற கடலைக்கண்டு
மன்னவனே சிவயோக நிலையில் நில்லே
விளக்கவுரை :