போகர் சப்தகாண்டம் 6746 - 6750 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6746 - 6750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6746. சாதிக்க வடபாகந்தனிலிருந்து சட்டமுடன் புலிப்பாணிக்கு உபதேசிக்க
மேதினியில் தேவாதி தேவரெல்லாம் மேன்மையுடன் கண்டல்லோ பிரமித்தேங்க
ஆதியென்ற பராபரியாள் முன்னேநிற்க அங்ஙனவே யுபதேசமனதுவந்து
ஜோதிமணி மந்திரத்தை உச்சாடித்து சுந்தரர்க்கு உபதேசங்கூறுவாரே

விளக்கவுரை :


6747. கூறுவார் உபதேசமென்ன வென்றால் குணமான திருப்பாலின் கடலின்மேலே
மாறுபாடானதொரு மயத்தைநீக்கி மகத்தான சிதபசாநிலையில்நின்று
தேறுதலாய் சமாதிமுகம் நிற்கவேண்டும் தேஜொளிவின் சின்மயத்தை யறியவேண்டும்
ஆறுதலமென்ற தொருபிரளயத்தை யப்பனே உச்சரித்து நிலையில்நில்லே

விளக்கவுரை :

[ads-post]

6748. நிலையான நிலையதுவும் என்னசொல்வேன் நிஷ்களங்கமானதொரு கபாலபீடம்
கலையான கலையதுவும் யிடகலைபிங்கலையில் கருவான கருவான நாசியது மையம்பற்றி
மலையான கபாலமென்ற பீடம்பற்றி மகத்தான மூலவரைமேலேசென்று
தலையான பஞ்சேந்திரம் உள்ளடக்கம் சாற்றுகிறேன் சிவயோகம் சாற்றுவேனே

விளக்கவுரை :


6749. சாற்றுகிறேன் வாரமது ஒன்பதுந்தான் சட்டமுடன் தானடைத்து மேலேபூட்டி
போற்றியதோர் கும்பகத்தில் நின்றுகொண்டு போதனா சத்தியெல்லாம் மனதிலுன்னி
தூற்றியே தான்புடைத்து பொருளாராய்ந்து துப்புரவாய் சிதாபாசக்களையறுத்து
மாற்றியே வட்சரத்தை வுள்ளாராய்ந்து மகத்தான வுளவுதனை யறிந்துகொள்ளே

விளக்கவுரை :


6750. கொள்ளவே யறுபத்துக் கலைநான்காக கோடான கலைவகுத்து கயிர்கள்மாட்டி
விள்ளவே சச்சிதா நிலையில்நின்று விட்டகுறை வருமளவும் மேலேநோக்கி
உள்ளதொரு பூரணத்தை வெளிகாட்டாமல் வுத்தமனே விசுத்தியிலே நின்றுகொண்டு
தெள்ளமுர்தமான தொரு ஞானப்பாலை தேற்றமுடன் ஊசரத்திலிருந்து தாக்கே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar