6741. வசியமாம் பட்சிதனை பிடித்துவந்து
வழக்கமுடன் பாஷைகளைச் சொல்லலாகும்
நிசிதமுடன் அரவமதை
யாட்டலாகும் நிஷ்டூரமானதொரு கொடியபேரை
நசிதமுடன் நன்மையாற்
சொல்லலாகும் நலமான பரிபோகஞ் செய்யலாகும்
பசிவந்த பாலனுக்கு
பால்கொடுத்த பாருலகில் கதைபோல முடியுந்தானே
விளக்கவுரை :
6742. தானான வுலகமதையாண்டுமென்ன தாரணியில் கீர்த்தியது பெற்றுமென்ன
கோனான கோவேந்தர் தன்னைப்போலே
கொற்றவனே கிரீடமதைக் கொண்டுமென்ன
தேனான மாளிகையுங் கட்டியென்ன
திகழான சமுசாரங் கொண்டுமென்ன
பானான பாலகரைப் பெற்றுமென்ன
பாலகனே ஞானமென்ற பால்தான்வேண்டே
விளக்கவுரை :
[ads-post]
6743. பாலான ஞானமென்ற பாலையப்பா
பகருகிறேன் புலிப்பாணி பளிங்குள்ளானே
மேலான பதந்தனையே
நண்ணவேண்டும் மேதினியில் பவக்கடலையகற்றவேண்டும்
நாலான பதந்தனக்கு மேலேயப்பா
நற்பதமாம் பொற்பதத்தை நண்ணல்வேண்டும்
காலான சிதாபாசப் பொருளையப்பா
கருதுவேன் உந்தமக்கு கருதுவேனே
விளக்கவுரை :
6744. கருதவென்றால் நாவில்லை
பாவுமில்லை கண்மணியே புலிப்பாணி கவிராஜேந்திரா
திருகமுள்ள திருப்பாலின்
கடலின்பக்கம் சிற்பரனே என்பாலா சிரியவானே
குருவினது காலாங்கி
வாக்குபோலே குணமான வுபதேசம் நீயும்பெற்று
பரிதிமதி யுள்ளநாளளவுமட்டும்
பாலகனே யுபதேசம் போற்றுவாயே
விளக்கவுரை :
6745. போற்றவே புலிப்பாணி
புகழுள்ளானே பொங்கமுடன்திருப்பாலின் நடுமையத்தில்
ஆற்றவே கிருஷ்ணாவதாரனப்பா
அலைகடலில் பள்ளிகொண்ட வம்பலத்தில்
நாற்றிசையும் நாதாந்த
சித்துதாமும் நடுக்கமுடன் ரிஷிகளெல்லாம் பார்த்திருக்க
மேற்புரத்தில் போகரிஷி
நாதர்தாமும் மெல்லெனவே வடபாகஞ் சாதிப்பாரே
விளக்கவுரை :