6931. நாலான திருவிருஞ்சி
தலமுமப்பா நலமான மலைநாடு கள்ளர்தேசம்
பாலான கோர்வையது
என்னசொல்வேன் பாங்கான விளையாட்டு சத்தமெட்டு
காலான திருச்சோழ தலமுமாகும்
கருவான மகிமையது என்னசொல்வேன்
நூலான கோர்வையது நாலுபத்து
நுட்பமுடன் கலையாறு பாசமெட்டே
விளக்கவுரை :
6932. எட்டான சேரனது தலமுமப்பா
எழிலான மகிமையது என்னசொல்வேன்
மட்டான தலபதியின்
மகிமைசொல்வேன் மகத்தான கோர்வையது தொண்ணூற்றாறு
திட்டமுடன் பாண்டியனார்
தலமுமப்பா திகழான வைகைவள நாடேயாகும்
வட்டமுடன் கோர்வையது
என்னசொல்வேன் வண்மையுள்ள கலைரெண்டு சோடசமுமேழே
விளக்கவுரை :
[ads-post]
6933. ஏழான காசியது எட்டேயாகும் எழிலான மகிமையது என்னசொல்வேன்
பாழான கோர்வையது
நூற்றிரண்டுபத்து சட்டமுடன் மகிமையது மெத்தவுண்டு
காழான நாகார்ச்சுன
தலமுமாகும் கருவான கோர்வையது எழுபத்திரண்டு
தாழான டில்லியது மகிமைமெத்த
தாக்கான கோர்வையது எண்பத்திரண்டே
விளக்கவுரை :
6934. ரெண்டான சீனபதி
தன்னிற்சென்று எழிலான குளிகையது யானும்பூண்டு
குண்டலியாம் வாசிதனை
பூட்டியல்லோ கொற்றவனே சீனபதி யானிருந்து
சண்டமாருதம்போலே
சிலநாட்சென்று சாங்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வண்ணமுடன் தீர்த்தவரை
காணுதற்கு வளமுடனே சென்றதொரு மகிமைபாரே
விளக்கவுரை :
6935. பாரேதான் படிகமாந்
தீர்த்தங்கண்டேன் பாங்கான ஜம்புவென்ற தீர்த்தங்கண்டேன்
நேரேதான் செந்தாமரை
தீர்த்தங்கண்டேன் நெடிதான மனோன்மணியாள் தீர்த்தங்கண்டேன்
கூரேதான் மஹேஸ்வரனார்
தீர்த்தங்கண்டேன் குறிப்பான மச்சமென்ற தீர்த்தங்கண்டேன்
சீரேதான் மானிடவ
தீர்த்தங்கண்டேன் சிறப்பான கோபருவ தீர்த்தங்கண்டேனே
விளக்கவுரை :