போகர் சப்தகாண்டம் 6466 - 6470 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6466 - 6470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6466. ஆச்சப்பா பாண்டமதை திறந்துமைந்தா வப்பனே மூசைதனில் இருக்குஞ்சத்தை
பாச்சலென்ற சூதமது வெண்ணைதன்னை பக்குவமாய் வருத்தெடுத்து பீங்கானிட்டு
மூச்சடங்கிப் போனதொரு சூதந்தன்னில் முசியாமல் கல்லுப்பு துலாமேபோடு
மாச்சலுடன் சூதமென்ற வெண்ணைதானும் மார்க்கமுடன் உருகியல்லோ நிற்கும்பாரே

விளக்கவுரை :


6467. நிற்குமே சூதமென்ற வெண்ணைதன்னை நீதியுடன் மூசையிட்டு வுருக்கிப்பாரு
அற்பமென்று நினையாதே யறிவுள்ளேனே ஆகாகா வானத்து மீன்தானாச்சே
சொற்பமென்று நினையாமல் ரவிவான்சேர்த்து துப்புரவாய் பூசையது செப்பக்கேளு
துற்கையென்ற காளிக்குப் பூசைபோடு துறையான வெள்ளிமுகங் காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

6468. காணலாம் சூதமென்ற வெள்ளிதன்னை காசினியில் நாதாந்த சித்தர்தாமும்
பூணலாம் சித்துமுனிக்கான வேதை பூவுலகில் சமுசாரிக்கான வேதை
வேணபடி சூதமதைக் கொன்றபேர்க்கு வெகுபாடு வெகுகேடு குஷ்டரோகம்
ஆணவங்கள் தானொடுங்கி வழிந்துதேகம் வப்பனே சகரோகமாவார்பாரே

விளக்கவுரை :


6469. பாரப்பா சூதமதைக் கொன்றபேர்கள் பாருலகில் வெகுபேர்கள் மடிந்தாரப்பா
நேரப்பா தவயோகி வேடம்பூண்ட நிஷ்களங்கமானதொரு சிவயோகிக்கும்
கூரப்பா வித்தையது பலிக்கும்பாரு குவலயத்தில் மற்றோர்க்கு பலியாதப்பா
ஆரப்பா புலிப்பாணி புனிதவானே அன்புடனே யானுரைத்தேன் பண்பாய்க்கேளே

விளக்கவுரை :


6470. பண்பான புலிப்பாணி பாலாகேளீர் பகருகிறேன் சூதமென்ற செந்தூரத்தை
நண்பான நூல்களுள் வாராய்ந்தேதான் நாதாந்த சித்துமுனி யறிந்துமல்லோ
திண்பான செந்தூரப் போக்குதன்னை திசைமாறி யடைமாறி பிரட்டல்செய்து
உண்மையாய் சொன்னதொரு மொழியைப்போலே உவமைகொண்டு பாடிவைத்தார் பேதந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar