போகர் சப்தகாண்டம் 6841 - 6845 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6841 - 6845 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6841. சிவக்குமே அயமதுவும் பாஷாணத்தால் சிறப்புடைய குற்றமது பதினொன்றும்போம்
தவப்பலனைக் கொண்டவர்க்கு சித்தியாகும் தகமையுள்ள மணலிரும்பு செந்தூரந்தான்
தவப்பனைக் கொண்டோர்கள் காணமாட்டார் வப்பனே புத்தியுள்ள புனிதவானே
பவக்கடலை விட்டகற்றி பாலாநீயும் பாருலகில் இருப்பதுவே புண்ணியமாமே

விளக்கவுரை :


6842. புண்ணியனா யிருக்கவென்றால் பூபாலாகேள் புகழான செந்தூரமுண்பதற்கு
திண்ணமுடன் தேனதனில் மண்டலந்தான் தீரமுடன் தானிருந்த தேகங்கற்றூண்
வண்ணமுடன் வாசியது மேல்நோக்காது வளமான செந்தூரந் தானுமல்லோ
நண்ணமுடன் சட்டையது தள்ளும்பாரு நாதாந்த சித்தர்கள் தான் ஆடுங்கூத்தே

விளக்கவுரை :

[ads-post]

6843. கூத்தான செந்தூரம் மண்டலந்தான் குறிப்புடனே கொண்டவர்க்குப் பலனைக்கேளு
நீத்தமுடன் நெடுங்காலமிருக்கலாகும் நெடியான ரோகமது கடலேபோகும்   
சாத்தகி யாழ்வார்தானுங் கொண்டகற்பம் தாரணியில் வெகுகால மிருந்தாரல்லோ
பூத்தமலர் முகசுகுண மாதர்தம்மை புகழாக வாயிரம்பேர் கூடலாமே

விளக்கவுரை :


6844. கூடலாங் கிருஷ்ணாவதாரனல்லோ கொற்றவனார் சிலகாலம் உண்டகற்பம்
ஆடலாம் தேசவிளையாட்டையெல்லாம் வப்பனே வயமென்ற செந்தூரத்தால்
ஓடலாம் வெகுதூரம் நடக்கலாகும் வுத்தமனே நடந்தாலும் யிளைப்போயில்லை
தேடலாம் வெகுகோடி திரவியங்கள் தேடினால் பலனொன்றுமில்லைதானே

விளக்கவுரை :


6845. இல்லையே செந்தூரம் வேதைகாண எழிலான வெள்ளியது களஞ்சிநூறு
தொல்லையெனும் பிறவியது மாற்றம்போல தோறாமல் வர்ணமது சொல்லப்போமோ
கொல்லனது வுலையில் வுருக்கியல்லோ கொற்றவனே செந்தூரங் களஞ்சிதாக்கு
வல்லதொரு வெள்ளியது பழுப்புமாகி மகத்தான யேமமது சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar