6961. சங்கையில்லா பெருநூலை
பார்த்தபேர்கள் சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூலைப்
பார்க்காமாண்பர் எழிலான சாலோக சாபமீந்தான்
அங்கமுடன் சாரூப
பதவிமூன்றும் வப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித
போகந்தன்னை புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே
விளக்கவுரை :
6962. தானான இன்னமொரு
தண்மைசொல்வேன் தாக்கான புலிப்பாணி தயவுள்ளானே
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான பார்லோக மிடங்கொள்ளாது
பாலகனே சொல்வதற்கு நாளுமில்லை
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேற்றமுடன் கோடிமுறை சொல்வேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6963. பாரேதான் கலியுகம்
பிறக்கலாச்சு பாலகனே சத்தியமும் விழலாய்ப்போச்சு
ஆரேதான் உனக்கு மதிசொல்வார்
அப்பனே யுபதேசம் பெற்றமட்டும்
பேரிருக்க வூரிருக்க
பிதாவிருக்க பேரான மகுத்துவத்தை வெளியிடாதே
சீரழிந்த மாண்பரெல்லாஞ்
ஜெனிப்பாரப்பா ஜெகதலத்தில் கருமியென்ற கோடிபேரே
விளக்கவுரை :
6964. கோடியாம் நல்லவர்போ
லிருப்பாரப்பா கொற்றவனே யுந்தனுக்கு யுபதேசித்த
தேடியதோர் பொருளப்பா
சத்தகாண்டம் தெளிவான யேழாயிரங் காவியத்தை
பாடியே யுந்தனுக்கு தத்தமாக
பட்சமுடன் யான்கொடுத்த பெருநூலப்பா
வாடியே மயங்காதே மனம்விடாதே
மதிகெட்டு நில்லாதே நூல்கெடாதே
விளக்கவுரை :
6965. கொடுத்தாலும் விதியாளி பார்த்தறிந்து கொற்றவனே கொடுத்தாலும் புண்ணியமெய்தும்
கெடுத்ததொரு குடிகெடுக்கும்
பாவிகட்கும் கெடியான சண்டாள மாண்பருக்கும்
அடுத்துறவு நயம்பேசி
புரணிகூறும் வனியாயக்காரருக்கும் வறிவிலார்க்கும்
தொடுத்ததொரு பெருநூலாஞ்
சத்தகாண்டம் துப்புரவாய்க் கொடுத்தாலே பாவமாமே
விளக்கவுரை :