6571. துதிப்பான யின்னமொரு
பாகஞ்சொல்வேன் துப்புரவாய் புலிப்பாணி மன்னாகேளு
மதிப்புடைய படிகமென்ற
கல்தானப்பா மன்னவனே சேரதுவும் நிறுத்திக்கொண்டு
பதிவுடைய காச்சிக்கல்
பச்சைதன்னை பாங்குபெற இருசேராய் நிறுத்துக்கொண்டு
மதிபோன்ற பூநீருங்
கூடச்சேர்த்து மகத்தான வளையல் ரங்குதானுஞ்சேரே
விளக்கவுரை :
6572. சேரேதான் குகையிலிட்டு
செப்பக்கேளும் செயலான ஆறுவகை ஜெயநீர்தன்னை
வீரேதான் மூசையிட்டு குடோரி
சேர்த்து விருப்பமுடன் துருத்தியது நாலுகொண்டு
நேரேதான் தானுருக்கி
மைந்தாகேளு நேர்மையுடன் கருக்கட்டி வார்ப்பாயப்பா
ஆரேதான் மற்றொருவர்
காணாமற்றான் வப்பனே ஆறியபின் உடைத்துப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6573. உடைத்துமே பார்க்கையிலே
என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்தவண்ணம்
படிகமும் நவநீதம் யானறிந்து
பட்சமுடன் யானுரைத்த பச்சைதன்னில்
மடைபோன்ற சீரலது
இருக்கும்பாரு மகத்தான வணிகரிடஞ் சென்றாயானால்
சடைநீக்கி சாணைதனில்
கொண்டுமல்லோ சட்டமுடன் ஜோதிதனை யறிந்துபாரே
விளக்கவுரை :
6574. அறிவான பச்சையென்ற வைப்புதன்னை வப்பனே யுந்தமக்கு வரைத்தவார்போல்
குறியான முறையறிந்து
வழியறிந்து குணமான பாகமதுதானறிந்து
முறியாமல் வுருக்குமுகம்
பாலறிந்து முனையான கருவதனில் பாச்சும்போது
நெறியான பிறவியென்ற
கல்லைப்போலும் நெடிதான பச்சையென்ற தளமுமாச்சே
விளக்கவுரை :
6575. ஆச்சப்பா யின்னமொரு
பாகஞ்சொல்வேன் அறிவுள்ள சிறுபாலா வன்புள்ளானே
ஆச்சரியமானதொரு செப்புதன்னை
வப்பனே புலிப்பாணி யறைவேன்பாரு
மூச்சடங்கி தானிருந்தேன்
நெடுங்காலசித்து மூதுலகில் சமாதிகொண்ட காலாங்கிநாதர்
பாச்சலுடன் சீனபதி
சமாதிருந்து பட்சமுடன் எந்தனுக்கு உரைத்தவாறே
விளக்கவுரை :