போகர் சப்தகாண்டம் 6396 - 6400 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6396 - 6400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6396. புகட்டினேன் உந்தனுக்கு வன்புகூர்ந்து புகழான விலாங்கினது கற்பந்தன்னை
ஜகமுதும் சித்துமுனி சாத்திரத்தில் சாங்கமுடன் மறைத்துவைத்தார் என்னசொல்வேன்
அகங்கொண்ட மாண்பர்களுக்காகாவென்று வப்பனே சிடிகையெல்லா மறைத்துப்போட்டார்
சுகம்பெறவே யடியேனும் மனதுவந்து சூட்டினேன் மாண்பர்களுக் குகந்தவாறே

விளக்கவுரை :


6397. வாறான சூத்திரத்தில் மறைத்துதெல்லாம் வாகுடனே சாத்திரத்தில் பெருக்கிவிட்டேன்
கூறான சிடிகையென்ற மார்க்கந்தன்னை குணம்பெறவே செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி
மாறாமல் கைபாகம் செய்பாகந்தான் மன்னவனே செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி 
தூறான மார்க்கமது சென்றபேர்க்கு துப்புரவாய் யாதொன்றும் பலியாதன்றே

விளக்கவுரை :

[ads-post]

6398. பலியாது குடிகெடுக்கும் பாவியோர்க்கும் பாங்கான சண்டாள துரோகியோர்க்கும்
வலிதான பவமுடைய கருமியோர்க்கும் வாகுடைய சிடிகையென்ற வேதைதானும்
நவியாளர் தங்களுக்கும் அவனாதியோர்க்கும் நற்பெண்டிர்களைக் கெடுத்த துரோகியோர்க்கும்
கலியுடைய சப்பாணி குருடருக்கும் சட்டமுடன் ஒருக்காலும் பலியாதன்றே

விளக்கவுரை :


6399. அன்றான போகரேழாயிரத்தில் வப்பனே கடைக்காண்டந் தன்னிலப்பா
குன்றான மலைபோலே கோடிகற்பம் கொட்டினேன் நாதாக்கள் அறிந்ததில்லை
தென்றிசையில் அகத்தியனார் காவியத்தில் தேற்றமுடன் வெகுகோடி பாடிவைத்தார்
வென்றிடவே சத்தகாண்டந் தன்னிலப்பா விருப்பமுடன் பாடிவைத்தேன் கோடியாமே

விளக்கவுரை :


6400. கோடியாமின்னமொரு கற்பஞ்சொல்வேன் கோபாலா என்குருவே குமரவேலா
வாடியே மயங்காதே மன்னாகேளு வளமையுடன் நாரையென்ற கற்பஞ்சொல்வேன்
தேடியே கருநாரை கொண்டாராய்ந்து தேற்றமுடன் குடல்போக்கி சிறகுபோக்கி
ஆடியதோர் சூதமென்ற பானைதன்னை வப்பனே யதன்வாயிற் புகட்டிடாயே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar