6966. பாவமாம் நூலதனைப் பதனம்பண்ணு
பாலகனே சமாதிமுகம் வைத்துப்போற்று
ஆவலுடன் விதியாளி
வந்துகேட்டால் வப்பனே நீகொடுத்து மதிகள்கூறு
சாவதுவும் தலைமேலே
இருக்குமப்பா சாங்கமுடன் நூல்கொடுத்தால் மெத்தநன்று
போவதுமெய் இருப்பதுபொய்
என்றவாக்கியம் பொங்கமுடன் வேதமது நுணுக்கமாமே
விளக்கவுரை :
6967. வேதங்கள் நுணுக்கறிந்து
யீயாவிட்டால் வெகுபாவம் வெகுசாபம் நரகமெய்தும்
நீதமுடன் பரிசுத்தவாளருக்கு
நீதியுடன் கொடுப்பதுவே கர்மமாகும்
தோதமுடன் விதியாளி
வந்துகேட்டால் தோறாமல் சமாதிமுகம் இருந்தநூலை
ஆதவமாம் அருளினது
விசுவாசத்தால் வப்பனே நூல்கொடுத்து மதிகள்கூறே
விளக்கவுரை :
[ads-post]
6968. கூறவென்றால் புலிப்பாணி
குணமுள்ளானே கொற்றவனே கலியுகமும் பிறந்துபோச்சு
மாறலுடன் வையகத்தில்
வெகுபாடப்பா மாண்பர்களும் வெகுகேடு படுவாரப்பா
சீறலுடன் பொய்சூது
கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிதமார்க்கம்
மீறவே தானடக்குங்
கலியுகத்தில் மிக்கான வுண்மையது வறிந்துகொள்ளே
விளக்கவுரை :
6969. கொள்ளப்பா யொருவரையும்
நம்பவேண்டாம் கொற்றவனே கலியுகத்தில் அனியாயங்கள்
தள்ளவே போகாது தரணிமீதில்
சட்டமுடன் அனேகவித தெய்வமென்பார்
விள்ளவே விசுவாசம் பாவமுண்டு
வித்தகனே யனேகவித சாத்திரங்கள்
உள்ளபடி கூறுவார் மாந்தரப்பா
வுத்தமனே மயங்காதே புத்திவானே
விளக்கவுரை :
6970. புத்தியாய் கலியுகத்தில்
சிலதுகாலம் புகழுடனே தாமிருந்து சமாதிகொள்வாய்
சத்தியத்தைத் தவறாதே
தம்பிரானே சதகோடி சூரியன்போல் ஞானங்கொள்ளு
வித்தகனே விற்பனனே
விண்ணுள்ளானே விட்டகுறைநேருமட்டும் வையகத்தில்
புத்தியாய்
நெடுங்காலந்தாமிருந்து புண்ணியனே சமாதிமுகம் புரிவீர்தானே
விளக்கவுரை :