போகர் சப்தகாண்டம் 6521 - 6525 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6521 - 6525 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6521. தாக்கவே மேலுமந்த பில்லைமூடி தளமுடனே மணலதனை மேலேசெய்து
நோக்கமுடன் தானெரிப்பாய் நாலுசாமம் நுட்பமுடன் தீயாறி எடுத்துப்பாரு
பாக்கதுபோல் வுருளையது திரண்டுமல்லோ பாங்குடனே தானிருக்கும் வருண்மைந்தாகேள்
வாக்கதுவும் பொய்யாது புண்ணியவானே வளம்பெறவே சூதமதை எடுத்திடாயே

விளக்கவுரை :


6522. எடுத்துமே சூதமென்ற மணியையப்பா எழிலான சாரணைதான் செப்பக்கேளு
கொடுத்துமே யாறுவகை ஜெயநீர்தன்னால் துப்புரவாய் தானரைப்பாய் நாலுசாமம்
வித்ததொரு வெண்ணைதனை தானெடுத்து விருப்பமுடன் நாகுயென்ற காசந்தன்னை
அடுத்துமே பலமதுவும் நிறுத்துமைந்தா வப்பனே கவசமது செய்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

6523. செய்யவென்றால் காடியென்ற காரந்தன்னில் செம்மலுடன் சூதமென்ற வெண்ணை தன்னை
பையவே கவசமதுசெய்துபாலா பாங்குபெற சுக்கானின் சீலைசெய்து
துய்யதொரு ரவிதனிலே காயவைத்து துப்புரவாய்யெழுசீலை வலுவாய்ச்செய்து
வெய்யவே யுமிபுடத்தில் போட்டுமைந்தா விருப்பமுடன் தானெடுப்பாய் பதமாய்த்தானே

விளக்கவுரை :


6524. பதமான சீலையது பிரித்துமைந்தா பாங்குபெறத் தானெடுப்பாய் சூதந்தன்னை
கதமான சூதமது இறுகியல்லோ கண்மணியே நல்லதுபோலிருக்கும்பாரு
பதமுடனே மணியெடுத்து செப்பக்கேளு பாங்குபெற வெள்ளாட்டுப்பாலினாலே
மிதமுடனே நாற்சாமம் சுருக்குத்தாக்கு மிக்கான சூதமென்ற மணியுமாமே

விளக்கவுரை :


6525. மணியான சூதமதை எடுத்துமைந்தா மார்க்கமுடன் குளிகைக்கு வழிதான்சொல்வேன்
அணியான பூநாகம் பலம்பத்தப்பா வப்பனே மணிபோக்கி எடுத்துப்பாரு
கணிதமுடன் தேனதனில் அரைத்துமைந்தா கருத்துடனே மணிதனக்குக் கவசஞ்செய்து
பணிதமுடன் சீலையது காவிக்கல்லால் பான்மையுடன் தான்பொதித்து ரவியிற்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar