6506. காணேதான் இன்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் கருவான புலிப்பாணி கண்ணியவானே
தோணவே பூதமென்றால் பஞ்சபூதம்
சொல்லுகிறேன் நாதாக்கள் மகிமைதன்னை
வேணபடி வாதமெனும்
தேர்தானப்பா விருப்பமுடன் பூட்டுகிறேன் பஞ்சபூதம்
ஆணரசர் முன்னுக்குள்
அஞ்சுபூதம் வப்பனே சரக்குவகை பூதமஞ்சே
விளக்கவுரை :
6507. அஞ்சான தேதென்று
கேட்பாயானால் வப்பனே தங்கமது பிரிதிவாகும்
துஞ்சமென்ற இரும்பதுவும்
வாயுவாகும் துப்புரவாய்ச் செம்பதுவும் தேய்வாகும்
மிஞ்சவே காரீயம் அப்புவாகும்
மிக்கான நாகமது ஆகாசந்தான்
துஞ்சலென்ற லோகமது
வஞ்சுங்கூடி துறையான பஞ்சபூத மொடுக்கந்தானே
விளக்கவுரை :
[ads-post]
6508. ஒடுக்கமாந் தேருக்கு
பிரிதியாச்சு வுத்தமனே பீடமது வுரைப்பேன்பாரு
தொடுக்கவே பாஷாணம்பஞ்சபூதம்
தோராமல் பீடவகை யரைப்பேன்பாரு
இடுக்கமுள்ள கெந்தியது
பிரிதிவாகும் யெழிலான கெவுரியது தேய்வேயாகும்
விடுக்கவே லிங்கமது
வாகாசமாகும் விரிவான வீரமது வுப்புமாமே
விளக்கவுரை :
6509. அப்பான துரிசியது
வாய்வுமாகும் வழகான பாஷாண பஞ்சபூதம்
உப்பான காரசார பஞ்சபூதம்
வுத்தமனே யானுரைப்பேன் விபரங்கேளு
கப்பலென்ற தேருக்கு
வுருளையப்பா கனமான லவணமென்ற பூதமெல்லாம்
ஒப்பமுடன் வெடியுப்பு
பிரிதிவாகும் ஓகோகோ நாதாக்கள் ஆடுங்கூத்தே
விளக்கவுரை :
6510. கூத்தான வெடியுப்பு பிரிதிவாச்சு குணமான வளையலுப்பு தேய்வுமாச்சு
நாத்தமென்ற கல்லுப்பு
வப்புவாச்சு நலமான சீனமது வாய்வுமாச்சு
சார்ரிரத்தில் உரைத்தபடி
பூநீரப்பா தண்மையுள்ள தாகாசந் தானேயாகும்
சூத்திரமாம் பிரிதிவினில்
உற்பவித்த சுடரான வுப்பதுவு மாகாசமாச்சோ
விளக்கவுரை :