அகப்பேய் சித்தர் பாடல்கள் 86 - 90 of 90 பாடல்கள்
அகப்பேய் சித்தர் பாடல்கள் 86 - 90 of 90 பாடல்கள்
86. நாதாந்த வுண்மையிலே அகப்பேய்
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் அகப்பேய்
மெய்யென்று நம்பாதே.
விளக்கவுரை :
87. ஒன்றோ டொன்றுகூடில் அகப்பேய்
ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் அகப்பேய்
நில்லாது கண்டாயே.
விளக்கவுரை :
88. தோன்றும் வினைகளெல்லாம் அகப்பேய்
சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும் அகப்பேய்
சுத்த வெளிதனிலே.
விளக்கவுரை :
89. பொய்யென்று சொல்லாதே அகப்பேய்
போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள் அகப்பேய்
வீடு பெறலாமே.
விளக்கவுரை :
90. வேத மோதாதே அகப்பேய்
மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய்
பாவித்துப் பாராதே.
விளக்கவுரை :
அகப்பேய் சித்தர் பாடல்கள் முற்றும்