புலிப்பாணி ஜாலத்திரட்டு 26 - 30 of 211 பாடல்கள்
சீலை குடை பிடிக்க
26. தானென்ற கருவிழிக் காப்பு கட்டி
தயவாகப் பொங்கலுடன் பலியுமிட்டு
தேனென்ற திக்கு பந்தனமோ டெட்டுந்
திறமாகச் செய்து வெட்டிக் கிழங்கு வாங்கி
கோனென்ற சோமனிலே விராக னொன்று
குணமாகத் தானறுக்கி முடிந்துக் கொண்டு
வானென்ற ஆகாசந் தன்னிற் போட
வளமாகப் குடைபிடித்து வரும்நீ பாரே.
விளக்கவுரை :
கருவிழுதி என்னும் செடிக்கு காப்பு கட்டி அதற்குப் பொங்கலிட்டு பலியிடவும். பின்னா் எட்டு திக்குக்கும் பந்தனஞ் செய்து அதனை அதன் கிழங்கை கொண்டு வந்து சோமன் அல்லது நான்கு சதுரமான சீலையில் ஓரு விராகன் எடைக்கு அதன் கிழங்கை நறுக்கி முடிந்துகொண்டு ஆகாயத்தை நோக்கி மேலே போட்டால் அது குடை பிடித்துக் கொண்டு வருவது போன்று கீழே வரும்.
தேவா்களை காணும் ஜாலம்
27. பாடினே னன்னமொன்று சொல்லக் கேளு
பாங்கான சிறுமுன்னைக் காப்புக் கட்டி
ஆடியே பொங்கலிட்டுத் தூப தீபம்
அப்பனே பலிகொடுத்து வேரை வாங்கி
கூடியே பொடியாக்கிக் கருச்சீலை தன்னில்
குணமாக திரியாக்கி யைங்கோ லத்தால்
வாடியே விளக்கிட்டுத் தீபந் தன்னை
வளமாக ஆவி நெய்யி லேத்திடாயே.
விளக்கவுரை :
இன்னொரு ஜாலவித்தையைப் சொல்லுகிறேன் கேட்பாயாக. சிறுமுன்னைக்கு காப்புக் கட்டி, பொங்கலிட்டு, தீபதூபம் காட்டி, பலி கொடுத்து அதன் வேரைக் கொண்டு வந்து நன்குத் தூளாக்கி கருப்பு சீலையில் (துணியில்) தடவித் திரியாக்கி ஐஙகோலத் தைலத்தில் நனைத்து விளக்கிலிட்டு பசுவின் நெய் ஊற்றவும்.
28. ஏற்றியே கோவிலுக்குள் மாளிகைக்ககுள்
இன்பமாய்த் தானிருக்கு மிடத்தி லப்பாா
பாத்தியே மனுக்களைத்தான் வரவழைத்து
பாரென்று சொல்லி வாய்மூடு முன்னே
வாத்தியே தேவரெல்லாங் கண்ணிற் காணும்
வையகத்தோற் தான்மயங்கிப் பார்ப்பார் பாரு
சாத்தியே திரியணைக்க மறையும் பாரு
சார்வாகப் போகருட கடாட்சந் தானே.
விளக்கவுரை :
நெய் ஊற்றிய அந்த விளக்கை கோவவவிலுக்குள்ளோ அல்லது மாளிகைக்குள்ளோ எல்லோரையும் வரச் சொல்லி விளக்கை ஏற்றினால் தேவா்களையெல்லாம் கண்களில் காணலாம். இதனை ப் பார்த்த மக்கள் ஆச்சியமடைவார்கள். விளக்கின் திரியை அணைத்தால் சகலமும் மறைந்து விடும். இது போகருடைய அருளால் ஏற்படுவதாகும்.
கண்ணாடியை நூலால் அறுக்கும் ஜாலம்
29. கணத்தநல்ல கண்ணாடியை யறப்பதற்கு
கண்மணிய ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமருக் கிலைதானப்பா
வண்மையான யதினுடைய ரசத்தை வாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலை வாங்கி
இரண்டான ரசத்தினிலே தோய்த் துலா்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலால்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய் போமே.
விளக்கவுரை :
கணத்த கண்ணாடியை அறுப்பதற்கு ரவையும் வேண்டாம். கல்லும் வேண்டாம். காட்டிலே விளையும் முருக்கிலையைக் எடுத்து உலா்தி வைத்து கொண்டு மக்களைக் கூட்டி அவா்கள் முன்னிலையில் ஓரு கண்ணாடியைக் காட்டி இந்த நூலை அறுத்தால் கண்ணாடி அறுத்தால் கண்ணாடி இரண்டு துண்டாகிவிடும்.
நோக்கு வித்தை
30. பாடினே னின்னமொன்று சொல்லக் கேளு
பண்பான குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கொழிஞ்சியது போல யப்பா
நாட்டிலே மெத்தவுண் டறியார் பாரு
கூடியே யதைச்சுருட்டி மேலே யப்பா
குணமான ஆள்பாராங் கல்லை வைக்க
ஆடியே பார்த்திருக்க அந்தக் கல்தான்
அப்புரத்திற் போய்விழுங் கண்டு பாரே.
விளக்கவுரை :
இன்னொரு வித்தையான நோக்கு வித்தைப் பற்றிச் சொல்லுகிறேன் கேட்பாயாக. குன்றுடைய தாங்கி அதாவது மலைத்தாங்கி மூலம் என்று கூறப்படுவது போன்று கொழிஞ்சி செடி போல நாட்டில் பல உண்டு. ஆனால் இதனை பலபோ் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த செடியைக் கண்டுபிடித்து அதன் மீது ஆள் பலமுள்ள பாராங்கல்லை வைத்தால் அந்தக் கல் அசைந்து அப்பால் போய் விழும். அதனால் இதுதான் அந்த செடி என்று கண்டு கொண்டு வரவும்.