Showing posts with label பத்திரகிரியார். Show all posts


பத்திரகிரியார் பாடல்கள் 226 - 231 of 231 பாடல்கள்

226. எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்?

விளக்கவுரை :

227. உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

228. விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம்?

விளக்கவுரை :

229. என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம்?

விளக்கவுரை :

230. மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி
காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம்?

விளக்கவுரை :

231. ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து
நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 221 - 225 of 231 பாடல்கள்

221. உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்?

விளக்கவுரை :

222. ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

223. ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்?

விளக்கவுரை :

224. காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு
மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

225. நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான
தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 216 - 220 of 231 பாடல்கள்

216. ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

217. முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்?

விளக்கவுரை :

218. கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

219. நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

220. தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 211 - 215 of 231 பாடல்கள்

211. என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

212. தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்?

விளக்கவுரை :

213. என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

214. தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

215. இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.