புலிப்பாணி ஜாலத்திரட்டு 86 - 90 of 211 பாடல்கள்
86. என்னயே யுத்தண்ட வஸ்திர சா்ப்பா
என்னப்பா கண்ட பேரண்டஞ் சிந்தி
வென்னவே மூலமப்பா சொல்லக் கேளு
வளமான ஓம்..... இரீம்... ஸ்ரீரீம் மென்று
உன்னவே கிலீம் ... ஐயும் ... சுவாஹா வென்று
உத்தமனே கொண்ட பேரண்ட நரசிங்கா
பன்னவே மகா சா்பானந்த காயா
பதிவான சா்வசத்ரு நாசமாமே.
விளக்கவுரை :
இதனால் கண்ட பேரண்டமானது சித்தி யாகும் என்பதை முறையோடு உரைக்கிறேன் கேட்பாயாக. " ஓம்.... இரீம்... ஸ்ரீரீம்... கிலீம்... ஐயும்... சுவாஹா...." என்றும் பேரண்ட நரசிங்கா ..... மகா சா்ப்பானந்த காயாட என்றும் இலட்சம் தடவைகள் உச்சாடனம் செய்தால் உங்களது எதிரிகள் நாசமாவார்கள்.
87. ஆமப்பா சிந்தி சிந்தி யந்தி யந்தி
அடைவான லட்சமுரு தானேயோத
தாமப்பா தப்பாம லாயிரந்தான் பத்து
தயவான ஓம் அப்பா ஆயிரந்தான்
வாமப்பா பிராமண போசனந்தான் நூறு
வளவான பூசையது நான் பத்தாப்பா
நாமப்பா கெண்ட பேரண்டஞ் சித்தி
நாயகனே சகலசித்து மாடும் பாரே.
விளக்கவுரை :
மேற்கண்ட மந்திரத்தை மனதிடத்துடன் காலை - மாலை இலட்சம் தடவைகள் செபிக்க வேண்டும். அதாவது தினம் பத்தாயிரம் தடவைகளும், " ஓம் " என்று ஆயிரம் தடவைகளும், செய்யவேண்டும். பின்னா் பிராமணா்களுக்கு போஜனம் போட்டு பூசை போட்டு பத்து நாட்கள் தொடா்ந்து செய்தால் கண்ட பேரண்ட மந்திரம் சித்தியாகும். இதனால் சகல வித்தைகளும் கைகூடும்.
88. பாரடா பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
பண்பான குளிகனொடு தேவா் யாருஞ்
சீரடா சித்தா் முத்தா் முனிகள் பூதஞ்
சிறப்பில்லா ராட்சதையு மேவல் வைப்பு
தீரடா சத்துருக்கள் மிருசாதி
திறமான விஷமுதலாய் யெதிர் நில்லாது
வீரடா நினைத்தபடி யெல்லாஞ் சித்தி
விதமா போகருட கடாட்சந் தானே.
விளக்கவுரை :
பிரமன், விஷ்ணு, ருத்திரன், இந்திரன், தேவா் இவா்களுடன் சித்தா், முத்தா், முனியவா்கள், துணையிருப்பார்கள். பூதங்கள், ராட்சதங்கள், ஏவல், வைப்பு, சத்ருக்கள், மிருக ஜாதி, விஷஐந்துகள் போன்ற வைகள் எல்லாம் நில்லாது விலகிவிடும். இவையெல்லாம் போகருடைய கடாட்சத்தினாலாகும்.
கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம்
89. அருளலே ஓம்... ஆம்.... ஸ்ரீயுங்.... கிலியும்
அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாஹா வென்று
பொருளாக லட்சமுரு செபித்து தீரு
பொங்கமாய்த் தா்ப்பணமுமோமன்னம்
மருளாக பூசையது பத்துஞ் செய்நீ
மைந்தனே சித்திக்கக் கிரிகை யாகுஞ்
சுருளாக நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
சுகமான போகருட கடாட்சந் தானே.
விளக்கவுரை :
கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம் மிகவும் மேன்மையானதாகும். ஆதலின் " ஓம் .... ஆம்..... ஸ்ரீம் ... கலியும் .... அரிய கார்த்திகை வீரியார்ச்சின சுவாஹா ......." என்று இலட்சம் தடவைகள் செபித்துவிட்டு தா்ப்பணம், ஹோமம், பூசை முதலிய பத்து வகைகளை செய்தால், காரியங்கள் சித்தியாகும். நீ நினைத்தப்படி எல்லாம் நடக்கும். இவையெல்லாம் போகருடைய கடாட்சமாகும்.
சமுத்திர ஜாலம்
90. தானென்ற மகேந்திரத்தின் ஜாலமாச்சு
தயவாகச் சாகரத்தின் ஜாலங் கேளு
வானென்ற மையெடுத்துக் கையிற்பூசி
வளமாக மண்ணள்ளித் திசையிற் போடு
கோனென்ற சப்த சாகரமோ ரேழும்
குணமான முன்காண வருகும் பாரு
தேனென்ற தீவாந்திர மெல்லாந் தோற்றுந்
திருமாலும் லட்சுமியுந் தோற்றும் பாரே.
விளக்கவுரை :
பல மேன்மையான பல ஜாலங்களை முன்னா் சொல்லியுள்ளேனே. இப்போது சமுத்திர ஜாலம் பற்றி கூறுகிறேன் கேட்பாயாக. இந்திர ஜாலத்திற்கு செய்த மையை எடுத்து கையில் பூசிக் கொண்டு தரையில் மண்ணை எடுத்து எட்டு திக்கிலும் போட்டால் ஏழு சமுத்திரங்களும் கண்ணில் தெரியும். தீவாந்திரங்களெல்லாம் தெரியும். விஷ்ணுவும் - லட்சுமியும் காட்சியளிப்பார்கள்.