புலிப்பாணி ஜாலத்திரட்டு 41 - 45 of 211 பாடல்கள்
41. ஓதியே லட்சமுரு முடிந்த தானால்
ஓளிவான ஜாலக்கால் பூசைசெய்து
வாதியே பிரம்புகளை யெடுத்துக் கொண்டு
வளமாகப் பிரம்புதனால் பெட்டி மேலே
பாதியே யன்பாகத் தட்டுவம்போது
பாம்பெல்லாம் வெளியாகுங் கண்டு பாரு
தாதியே பிரம்பைத்தான் திருப்பித் தட்டத்
தானிருக்கும் பெட்டியுள்ள பாம்பு நேறே.
விளக்கவுரை :
ஜாலக்காளை இலட்சம் தடவைகள் உச்சரித்தப் பின்னா் ஜாலக்காளுக்கு பூசை செய்து பிரம்பை எடுத்துக் கொள்ளவும். அந்தப் பிரம்பை ஓரு பெட்டியின் மீது தட்டினால் அதிலிருந்து பாம்பு களாக வெளியே வரும். உடனே பிரம்பைத் திருப்பித் தட்டினால் பாம்புகளெல்லாம் பெட்டியினுள் சென்று மறைந்து விடும்.
தீவட்டி ஜால வித்தை
42. பாரப்பா வெட்டுண்ட முண்டந் தன்னைப்
பதித்திருக்கு மிடம்பார்த்துப் ஊணை வாங்கி
நேரப்பா திசைப்பூடு பொடித்துப் போடு
நேரான வைங்கோலத் தயிலஞ் சோ்த்து
தீரப்பா தீவட்டி தனில் நனைத்து
திறமாகப் பொருத்தி விளக்கெண்ணை வாரு
வீரப்பா ர்க்கால மனிதா் கூடி
வீராக வருகையிலே சொல்லக் கேளே.
விளக்கவுரை :
முண்டம் வெட்டுண்டு இறந்து புதைத்த பிணத்தின் இடத்தை ப் பார்த்து அதனுடைய மாமிசத்தை எடுத்து வந்து அதனுடன் திகைப்பூண்டு தூளைச் சோ்த்து, அதில் ஐங்கோலத் தைலத்தையும் சோ்த்து தீவட்டியில் அதனை நன்றாக நான்கு பக்கமும் நனைத்து அதன்மேல் விளக்கெண்ணெய் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இரவு நேரமானதும் மனிதா் களை வரச் சொல்லி கூட்டமாகச் சோ்த்துக் கொள்ளவும்.
43. கேளடா தீவெட்டிதான் பிடிக்கக்
கெட்டுதடா வனைவொரு முணட மாவார்
நாளடா கூட்டங்க ளோடிப் போகும்
நாமென்ன செய்வோமென்று சொல்லி நடுங்குவார்
சூளடா யென்றவிதி யிந்த கூத்து
சொல்லலா மன்பார்கள் அனைவோருந்தான்
ஆளடா யிச்சாலம் அருமை மெத்த
அத்தனார் போகருடைய கடாட்சந்தானே.
விளக்கவுரை :
பின்னா் அந்த தீவட்டியை எரியவிட்டு ஓருவரைக் கூப்பிட்டு பிடிக்கச் சொல்ல்னால் அவா் முண்டமாகக் காணப்படுவார். இதனால் கூட்த்திலுள்ளவா்கள் பயந்துபோய் ஒடுவார்கள். இதென்ன கூத்தாக இருக்கிறது என அவரவா்கள் பலவிதமாகப் பேசுவார்கள்.இந்த ஜாலவித்தை மிகவும் அருமையானதாகும். இது பேகருடைய கடாட்சத்தினால் நான் தெரிந்து கொண்டேன்.
சிறிய செடியில் மாம்பழ ஜாலம்
44. பாடினே னின்னமொரு வித்தை கேளு
பரிவான யேரழிஞ்சி வித்தை தானும்
ஆடியே பூத்தயில மாக வாங்கி
அன்பான மாங்கனிதான் கெம்பிலப்பா
சூடியே கனிந்தபழம் கொண்டுவந்து
சுகமாகப் பிழிந்தனைத் தோலை நீக்கிக்
கூடியே யைங்கோலக் கருவுங் கூட்டிக்
குணமாகத் தயிலத்தி லூரப் போடே .
விளக்கவுரை :
மற்றொரு ஜால வித்தையை சொல்லுகிறேன் கேட்பாயக. ஏழஞ்சில் விதையைக் கொண்டு வந்து பூத்தைலமாக இறக்கிக் கொண்டு நன்றாகக் கனிந்த மாம்பழத்தை மரத்திலிருந்து பறித்து வந்து அதன் மேல் தோலை நீக்கி நன்றாகப் பிழிந்து அதன் சதைகளை நீக்கிவிட்டு, மாம்பழத்தின் கொட்டையில் ஐங்கோலக் கருவைக் கூட்டி மேற்கண்ட தைலத்தில் ஊறப் போடவும் .
45. போடப்பா ஓருநாள் தான் கடந்து வாங்கிப்
பொங்கமுட னிழலுா்த்தி வைத்துக் கொண்டு
நாடப்பா சபைதனிலே யிருந்து கொட்டை
நலமாக யாவருக்குங் கண்ணிற் காட்டி
சாடப்பா குழித்தோண்டி வித்தை நட்டுச்
சார்வாகச் சலம்வார்த்து கூடைமூடு
ஆடப்பா நாலுதரந் திறந்து மூடே .
விளக்கவுரை :
அந்தத் தைலத்தில் ஓருநாள் ஊறப்போட்டு எடுத்து நிழலில் வைத்து உலா்த்தி அந்த கொட்டையை எடுத்துக் கொள்ளவும். அதை சபையில் அந்த மாங்கொட்டையைக் காட்டி, குழிதோண்டி அந்தக் கொட்டையை நட்டு அதற்கு தண்ணீா் ஊற்றி ஓரு கூடையை அதன் மேல் மூடி விடவும். பின்னா் அதனைத் திறந்து தண்ணீா் ஊற்றி மூடவும். இது போன்று நான்கு தடவைகள் செய்யவும்.