புலிப்பாணி ஜாலத்திரட்டு 11 - 15 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 11 - 15 of 211  பாடல்கள்


11. சுற்றப்பா ஐங்கோலத் தயிலம் வாரு       
    சுருக்காகச் சிரசோட்டில் மையை வாங்கி
சிற்றப்பா தயிலத்தி லிழைத்து நன்றாய்
    சிமிழில் வைத்து ஜாலக்காள் பூசைசெய்து
அற்றப்பா மையெடுத்து வித்தை யாட
    அடைவாகச் சொல்லுகிறே னன்றாய்க் கேளு
முற்றப்பா பச்சைவைக்கோல் தன்னிற் தேய்த்து
    முன்போடப் பாம்பாகுங் கண்டு பாரே.

விளக்கவுரை :

அந்தத் திரியில் ஐங்கோலத் தைலம்வார்த்து உலரவைத்து உலர்ந்த்தும் மீண்டும் அந்தத் தைலத்தை ஊற்றி தைலம் நன்றாக ஊறியதும் தலை யோட்டுல் வைத்த பமேற்றி மையை வாங்கி சிமிழில் வைத்து ஜாலக்காள்  பூசை செய்து விட்டு அந்த மையை எடுத்து வித்தை செய்யவும் அந்த மையை எடுத்து பச்சை வைக்கோலில் தேய்த்து முன்னே போடப் பாம்பாகத் தெரியும்.

12. பாரடா புளியிலைகுக் குளவியாகும்
    பண்பான வேப்பலேக்குத் தைளை யாகுங்ஞ்
சீரடா நட்டுவக் காலி யாகும்
    சிறப்பான பலகுருவி சிரசிற்பூசிற்
கூரடா அந்தந்தப் பட்சி யாகுக்
    குணமாக ஓட்டிலிட விராக னாகும்
வீரடா  மண்கிள்ளிப் பூசினாக் கால
    விதமான  கெந்த  பொடி வாசந் தானே
 
விளக்கவுரை :


தயாரித்த இந்த மையைக் கையில் பூசிக் கொண்டு புளியிலையை உருவிப் போட்டால் குளவியாகும் இதுபோன்று வேப்பிலையைப் போட்டால் தேளாகும் நட்டுவக்கால்லியாகும் இந்த மையை பல குருவிகளின் இறக்கையில் பூசினால் நீ நினைக்கின்றப் பட்சியாகமாறும் இந்த மையை ஓட்டிலிட்டால் விராகனாகும் சிறிது மண்ணைக் கிள்ளிப் பூசினால் கந்தகப் பொடி வாசனையாக இருக்கும்.   

13. தானென்ற அம்மியிலே பூசினாக்கால்
    தயவான அம்மியது நடக்கும் பாரு
ஊனென்ற கழற்சிக்காய் வேண மட்டும்
    உத்தமனே பூசியதைகீழே போடு
கோனென்ற கழற்சிக்காய் மோதிக்  கொள்ளுங்
    கொற்றவனே சிறுசிலைக்கு மிந்த பாகந்
தேனென்ற போகருட கடாட்சத் தாலே
    தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்த மையை எடுத்து அம்மியில் பூசினால்அந்த அம்மியானது நகர்ந்து போகும் தேவையான கழற்சிக் காய்களைக் கொண்டு வந்து அந்தக் காய்களில் இந்த மையைப் பூசி கீழே போட்டால் கழற்சிக் காய்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்  கொள்ளும்  இது போன்றே சிறு கூழாங்கற்களுக்கும் செய்யலாம். இதனை எனது குரு போகருடைய அருளினால் தெளிவாகக் கூறியுள்ளேன்.

ஜாலக்காலள் பூசை

14. பாடினேன் ஜாலக்கான் பூசை மார்க்கம்
    பண்பான மஞ்சளின் கிழங்கு பாவை
சூடியே பெண்போலே ரூபஞ் செய்து
    சுகமாகக் கொடிமூல மேலே சுற்றி
ஆடியே பூசையப்பா சத்தி பூசை
    அடைவாகச் செய்தபின் தியான மோது
தேடியே ஜாகினி டாகினி ஜாலக்காள
    தேவிநீ றா... றா... றா... வென்றே யோதே.

விளக்கவுரை :

செய்கின்ற ஜாலங்கள் சிறப்பாக அமைய ஜாலக்காள் பூசை செய்யும் முறையைக் கூறுகிறேன்.மஞ்சளின் கிழங்கை கொண்டு வந்து அதன்  வடிவத்தைப் பெண்போல செய்து அதன்மேலே சித்திரமூலம் கொடியை போட்டுச் சுற்றி சக்தி பூஜை செய். அதன்பின்னா் தியானத்தில் அமா்ந்து "ஜாகினி, டாகினி, ஜாலக்காள், தேவிநீ, றா... றா... றா..." என்று மந்திரம் ஓதவேண்டும்.

15. ஓதவே மந்திரங்கள் லட்சமோது
    உன்னிடத்தில் விளையாடி யிருப்பான் பாரு
வாதமே யிவளுடைய ஜாலம் ஜாலம்
    வையகத்தோ் மதிமயங்கி யிருப்பா ரப்பா
சூதுதான் சொல்லவில்லை ஜால வித்தை
    சொன்னபடி தானாடுங் கண்டு பாரு
நாதனார் போகருட கடாட்சத்திலே
    நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்த மந்திரத்தை இலட்சம்  முறைகள் ஜெபிக்க வேண்டும். இதனால் அவள் உன்னுடன் விளையாடிக் கொண்டிருப்பாள்.இவளுடைய அருளினால் செய்கின்ற ஜாலங்களைக் கண்டு உலகத்தவா் மயங்கிடுவார். நான் பொய் சொல்லவில்லை. என் சொல்படி செய்தால் வெற்றி நிச்சயம். போகருடைய அருளினால் இதனைக் கூறியுள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar