புலிப்பாணி ஜாலத்திரட்டு 121 - 125 of 211 பாடல்கள்
வனமடக்கம்
121. தானேதா னின்னமொன்று சொல்லக் கேளு
தயவாக அவையடக்கம் அங்க மடக்க
மானேதா னங்கமேற் பங்கமடக்க
மைந்தனே வழியடக்கச் சுவாஹா வென்று
கோனேதான் தண்ணிமிட்டான் கிழக்குப் கப்பா
கொற்றவனே யருக்கநாள் காப்புக் கட்டி
வானேதான் பொங்கல் பலிபூசை யிட்டு
வளமான மந்திர மாயிரந்தா னோதே.
விளக்கவுரை :
மற்றொரு ஜாலவித்தையைக் கூறுகிறேன் கேட்பாயாக. " அவையடக்கம் ... அங்க அடக்கம் ... வழி அடக்கம் ... சுவாஹா" என்று சொல்லி, தண்ணீர் விட்டான் கிழங்குக்கு ஆதிவாரத்தில் காப்பு கட்டி பலி புசை செய்துவிட்டு பின்னர் மந்திரத்தை ஆயிரம் தடவைகள் செபிக்கவும்.
122. ஒதியே பிடுங்கிமுன் கருவைப் பூசி
ஒகோகோ காலடியில் மிதுத்துக் கொள்ளு
சோதியே யவனமது வயதி றாது
கறுக்கான மந்திரத்தை யோதி நில்லு
ஆதியே யவனமது வெட்டும் பாரு
அந்நிறத்திற் சொல்லாது அதீத வித்தை
வாதியே போகருட கடாட்சத்தாலே
வளமாக புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
செபித்தபின்னர் அந்த வேரைப் பிடுங்கி வந்து கருவைப் பூசி அந்த வேரை காலடியில் மிதித்துக் கொண்டு, வனத்தைப் பார்த்தபடி மந்திரத்தை ஒதவும். அச்சமயம் வன மடக்கமாகி வெட்டும். இந்த வித்தை ஒருபோதும் பொய்காது. இது அருமையான வித்தையாகும். இந்த வித்தையை போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.
ஒண்டி மூலிகை
123. கட்டப்பா மூலிகை யொன்று சொல்லக் கேளு
கணிவாக ஒண்டியுட மூலிக்கே தான்
கிட்டப்பா அமாவாசைக் கிராண காலங்
கிருபையுள்ள அருக்க னாளே தோன்றில்
நெட்டப்பா பொங்கல்பலி பூசைசெய்து
நேராக வேரெடுத்துக் கட்டிக் கொண்டால்
பட்டப்பா பார்வை முதலெது வானாலும்
பரத்திலனு காமலது அகன்று போமே.
விளக்கவுரை :
ஓரு மூலிகையின் சிறப்பைக் கூறுகிறேன் கேட்பாயாக. ஒண்டி மூலிகை என்று ஒன்று இருக்கிறது. அதனைக் கண்டு பிடித்து அமாவாசை அல்லது கிராணம் பிடித்திருக்கும் சமயம் அதற்க்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பலி பூசை செய்து அதணன் வேரைக் கொண்டு வந்து கட்டிக் கொண்டால் பார்வை முதல் எல்லா குறைகளும் அகன்றுவிடும்.
மைதடவிப் பார்த்தல்
124. போமப்பா ஆமையொன்று மண்தவளை யொன்று
பொங்கமுடன் கன்னிகோழி முட்டை யொன்று
தாமப்பா புதைத்தெலும்பு பலந்தான் ரெண்டு
தயவான ஈசலது பலந்தான் ரெண்டு
நாமப்பா நிலவாகை விதைதா னப்பா
நாயகனே பலமிரண்டு நிறுத்துப் போடு
ஆமப்பா மாக்கொடிதான் விராகன் மூண்று
அடைவாகப் பூத்தயிலமாக வாங்கே.
விளக்கவுரை :
மைபோட்டுப் பார்க்கும் வித்தையைச் செய்வதற்கு - ஆமை ஒன்று, தவளை ஒன்று, கன்னி கோழி அதாவது இளம் பெட்டைக் கோழியின் முட்டை ஒன்று பூதைத்த பிணத்தின் எலும்பு இரன்டு பலம், ஈசல் இரண்டு பலம், நிலவாகை விதை இரண்டு பலம், மாக்கொடி மூன்று விராகன் எடை இவைகளையெல்லாம் சேர்த்து பூத்தயிலமாக இறக்கிக் கொள்ளவும்.
125. வாங்கியே தயிலத்தை யெடுத்துக் கொண்டு
வளமான குழியம்பி தன்னிற் போடு
தாங்கியே யஞ்சனக்கல் விராக னொன்று
தான்போடு ஆள்காட்டி முட்டை நெய்யிற்
பாங்கியே கொஞ்சமது கூட விட்டுப்
பரிவாக ஒருசாமந் தானரைத்துக்
காங்கியே சிமிழில் வைத்து அனுமாருக்கும்
கனிவோடு அஞ்சனிக்கும் பூசை செய்யே.
விளக்கவுரை :
அந்தத் தைலத்தை எடுத்து கல்லத்திலிட்டு அதில் அஞ்சனக்கல் ஒரு விராகன் எடை, ஆள்காட்டி முட்டையின் வெள்ளைக் கரு கொஞ்சம் விட்டு நன்றாக ஒரு சாமம் நேரம் அரைத்து மை பக்குவத்தில் எடுத்து சிமிழில் வைத்துக் கொள்ளவும். அதனை வைத்து அனுமாருக்கும், அஞ்சனாதேவிக்கும் பூசை செய்யவும்.