புலிப்பாணி ஜாலத்திரட்டு 36 - 40 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 36 - 40 of 211  பாடல்கள்

36. பாரடா பேரிகையும் நகபத்தோடு
    பண்பான நகாறுமுதல் மத்தளந்தான்
சேரடா தம்பட்ட கனக தப்பை
    செயலான தபேலாவும் தவண்டை யப்பா  
கூரடா துத்தி மல்லாரி தாரை
    குணமான பம்பையொடு பூரி யப்பா
தீரடா சந்திரிவாத்தியஞ் சூரியாவாத்தியந்
    தெளிவான வுடுக்கைமுதல் முழங்கு தானே.

விளக்கவுரை :

பாக்கு வெட்டினால் வெட்டுகின்ற போது பேராகை, நகாறு, மத்தளம், தம்பட்டம், கனகதப்பை, தபேலா, தவண்டை, துத்தி, மல்லாரி, தாரை, பம்பை, பூசி, சந்திர வாத்தியம், சூரிய வாத்தியம், உடுக்கை போன்ற வாத்திய இசைகள் கேட்பதோடு, மேலும்-

37. தானென்ற வுடுக்கைமுதல் தப்பையோடு
    தயவான யின்னவெகு வாத்தியங்கள்
கோரென்ற வேரைத்தா னடுக்கடுக்காய்
    கொற்றவனே வெட்டுகையில் முழங்கும் பாரு
தேனேன்ற வாத்தியத்தின் காலம் ஜாலந்
    தெளிவாகக் குருமுறையால் தெளிந்து செய்நீ
ஆனென்ற போகருட கடாட்சத்தாலே
    அடைவாகப் புலிப்பாணி பாடினேனே.  

விளக்கவுரை :

உடுக்கை முதல் தப்பை வாத்திய இசைகளோடு மேலும் பல வாத்திய இசைகள் மேற்கண்ட வேரை வெட்டும் போது கேட்கும். இந்த வாத்திய ஜாலத்தை நன்கு தோ்ந்த குருவின் மூலகத் கற்றுத் தெளிந்து செய்ய வேண்டும். இதனை போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான் கூறியுள்ளேன்.

சிவப்பு நிறத்தில் பசுவின் பால் கறக்க

38. நேரப்பா நிட்சயமாய்ச் சொல்லைக் கேளு
    நினைவாகப் பசுவினிடக் கொம்பிலே தான்
சீரப்பா சித்திரமா மூலிவேரை
    சினப்பாக மைபோல ரைத்துக் கொண்டு
நீரப்பா னின்பக்கம் கொம்பிற் பூசி
    நினைவோடு சபைதனிலே பசு நிறுத்தி
ஊரப்பா வுன்பக்கம் பால் சுரக்க
    உனைமெச்சும் வந்தஜனம் வுண்மைதானே.

விளக்கவுரை :

நிச்சயம் வெற்றி தரும் ஜாலவித்தையைக் கூறுகிறேன் கேட்பாயாக. சித்திர மூலம் என்கிற வேரை மை போன்று அரைத்து பசுவின்  இடதுபுறக் கொம்பில் ஆறவிட்டு சபைக்கு கொன்டு வந்து பால் கறக்கும் செம்பை சபையில் கவிழ்த்துக் காட்டிவிட்டு இடதுபுறமாக உட்கார்ந்து உன்பக்கமாக இருக்கும் மடியைப் பிடித்துப் பால் கறந்தால்  சிவப்பு நிறமாக பால் வரும். அதன் பின்னா் பசுவை உள்ளே அழைத்துச் சென்று கொம்பில் பூசியதைக் கழுவிவிட்டு மறுமுறை வந்து பால் கறந்தால் பசுவின் பால் வெண்மையாக வரும்.

பாம்புகளை உண்டாக்கும் ஜாலம்

39. தேனேதா னின்னமொன்று சொல்லக் கேளு
    தயவாகச் சவத்தினுட வாயினுள்ளே
மானேதா னிருப்பாணி யுள்ளே விட்டு
    மைந்தனே மார்பினில்தான் வெள்ளி யாணி
தேனேதா னுந்தியிலே செப்பி னாணி
    தெளிவாக தானடித் தின்னங் கேளு
வானேதான் சவங்கிடந்து வெந்க பின்பு
    வளமாக மறுநாளி லேடுத்துக் கொள்ளே.

விளக்கவுரை :

இன்னொன்று ஜால வித்தையை சொல்லுகிறேன் கேட்பாயக. பிணத்தின் வாயில் இரும்பாணியும்,மார்பில் வெள்ளாணியும் தொப்புளில் செம்பாணியும் வைத்து அந்த பினம் எரிந்து வெந்த பின்னா் மறுநாள் அஸ்தியை கரைப்பதற்குள் முன்னா் வைத்த ஆனிகளை எடுத்து கொள்ளவும்.

40. கொள்ளவே கடாற்று முன்னே நீயுங்
    குணமாகத்  தானெடுத்துப் பூசை செய்து
தெள்ளவே பிரம்பில் வெள்ளிக் கட்டாய் போடு
    தெளிவாக யிரும்புதனை முன்னே போடு
கள்ளவே செம்பதுதான் பின்னே போடு
    கடிதாக வில்லைநீ செய்து பின்பு
அள்ளியே யைங்கோலக் கருவும் பூசி
    அடைவாக ஜாலக்கான் தியான மோதே.

விளக்கவுரை :

ஆற்றங் கரைக்குச் சென்று எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு பூசை செய்துவிட்டு ஓரு பிரம்பில் வெள்ளி ஆணியை முதலில் கட்டாகப் போட்டு இரண்டாவதாக இரும்பு ஆணியை முதலில்  கட்டாட்சகப் போட்டு மூன்றாவதாக செம்பு ஆணியை நடுவில் கட்டாகப் போட்டு மூன்றாவதாக செம்பு ஆணியை நடுவில் கட்டாகப் போட்டு அதன்பின்னா்  அவைகளின்மீது ஐங்கோலத் தைலத்தைப் பூசி பக்தியோடு ஜாலக்காளை தியானம் செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar