1261. புதைத்துமே ரிஷிகோடி
முனிவர்தாமும் பஊதலத்தி லிந்திரனாம்சித்தனுக்கு
பதைத்துமே சாபமது
கொடுத்திட்டார்கள் பாருலகில் பத்தனாய்த் திரியவென்றார்
சிதைத்துமே இந்திரனாஞ்
சித்தராஜன் சிறையிட்டு முறையிட்டுத் திரிந்தான்பாரில்
வதைத்துமே தானிறுந்ர
யிந்திரசித்தை வாகுடனே சாபமதை தீர்த்தார்பாரே
விளக்கவுரை :
1262. தீர்க்கவே ஜனகமுனி
பெரியோர்தாமும் திறமுடனே கானகத்தில் கொண்டுசென்று
பார்க்கவே யெல்லோரும்
புகழவென்று பாவித்தார் ஞானோபதேசவுண்மை
தேர்க்கவே சித்தருட
மகத்துவத்தை தெளிவுறவே ஜனகமுனி யெடுத்துக்கூற
மார்க்கவே மனோலயத்தி
லகித்துநின்று மதிப்புடனே யோகசமாதியில் நின்றாரே
விளக்கவுரை :
[ads-post]
1263. நின்றாரே
லங்கைபதியோரந்தன்னில் நெடுந்தூரம் சுனையொன்று தடாகமுண்டு
குன்றான மலைபோலப்பூஷணங்கள்
கோடானகோடி செம்பொன் கிடாரந்தன்னை
வன்றான பூமியிலேவைத்தார்
வாகான வேதாளங்காவலுண்டு
தன்றான பூஷணமாஞ் சாடிவைப்பை
தரணியிலே போகரிஷிகண்டிட்டாரே
விளக்கவுரை :
1264. கண்டிட்டே னிலங்கைக்கு
மேற்புரத்தில் கருவான சுரங்கமுண்டு கிடாரந்தன்னில்
குண்டிட்ட காவடியாங்
கோட்டைவாசல் கொடிதான கிங்கிலியர் அனுமார்கூட்டம்
தாண்டிட்ட காவற்கார
ணேகருண்டு சதகோடி ரிஷிகளெல்லாம் வருவார்போவார்
கொண்டிட்ட
சீதையாபரணந்தன்னைக் கோடித்துத்தான்வருவார் முனிவர்தாமே
விளக்கவுரை :
1265. முனியான லங்கைக்கு வடபாகத்தில் முனையான மலையோரம் பாரையண்டு
தனியான மண்டபமாங்
கோட்டையுண்டு தாக்கான கடலோரங் குத்துக்கல்லாம்
கனியான தேவதாமாவிருட்சம்
கடலருகே ராட்சதாள் கூட்டங்காவல்
பணியான சூரியசந்திரனுங்காணார்
பாருலகில் யெவராலும் பார்க்கப்போமோ
விளக்கவுரை :