போகர் சப்தகாண்டம் 2731 - 2735 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2731 - 2735 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2731. தானான தாளகமும் வங்கமானால் தாக்கான குருவுக்கு தற்காலந்தான்
வேனான செம்புக்கு நாலிலொன்று விருப்பமுடன் தான்கொடுத்து வூதிப்போடு
பானான செம்பதுவுங் கட்டிப்போகும் பாங்கான வூரலது போகும்பாரு 
தேனான மனோன்மணியாள் சித்தரூபி செம்புக்குப் புடம்போடச் சுத்தியாமே

விளக்கவுரை :


2732. சுத்தமாஞ் செம்புக்கு வெள்ளிநாலு சகமடனே செம்பதுவும் ஒன்றேயாகும்
முத்தமுடன் தங்கமது ஒன்றேயாகும் முயலான மூசைதனிலுருக்கிப்பாரு
சித்தமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு தெளிவான மாற்றதுவு மதிகங்காணும்
பத்தமுடன் புடத்துக்கு வுறுதித்தங்கம் பாலகனே சித்தர்செய்யும் வேதையாமே

விளக்கவுரை :

[ads-post]

2733. வேதையா மின்னமொருபாகங்கேளு வேடிக்கை சிமிட்டுவித்தை வாதம்பாரு
பாதையாம் தாளகமும் பலமொன்றாகும் பாங்கான துரிசியது பலமொன்றாகும்
காதையாம் பேயத்திப் பால்தானப்பா பாலகனே பாலதுவைக் கட்டிக்கேற்றி
சாதகமாய் ரவிமுகத்தில் துவைத்துப்பாலா சாங்கமுடன் உமிநீரால் அரைத்திடாயே

விளக்கவுரை :


2734. அரைக்கையிலே மெழுகதுபோலாகும்பாரு அப்பனே துரிசிக்கு கவசங்கட்டி
நிரைக்கையிலே மூன்றுபுடம் இப்படியேபோடு நிலையான தாளகமும் உருகிக்கட்டும்
திரைக்கவே துரிசிக்கு சரிநேரொக்க திறமான வீரமது நேரதாக
முறைப்படியே உமிநீராலரைத்து மைந்தா முன்போலப் புடம்போடக் கட்டிப்போமே

விளக்கவுரை :


2735. கட்டியதோர் புடமதுவும் பத்தேபோடு கருவான தாளகமும் மடித்துகொல்லும்
திட்டமுடன் தாளகத்தைக் கொடுக்கும்மார்க்கம் தீர்க்கமுடன் செப்புகிறேன் மைந்தாகேளு
மட்டமுடன் பொன்னாகச் செய்வதற்கு மயங்காதே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
வட்டமுடன் தானருக்கி குருவொன்றீய வாகுடனே கரிபோல யிருக்கும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar