போகர் சப்தகாண்டம் 2741 - 2745 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2741 - 2745 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2741. கட்டியாம் நாகமதை எடுத்துக்கொண்டு கருவாகத் தானுருக்கிப் பின்னுங்கேளு
திட்டமுடன் வீரமதை நொறுக்கிக்கொண்டு திகழ்பெறவே களஞ்சியது கிராசமீவாய்
மட்டியென்ற கண்ணாடி பூநீரப்பா மார்க்கமுடன் இருகளஞ்சி பொடித்துக்கொண்டு
சட்டமுடன் கிராசமது கொடுக்கும்போது சார்பான நாகமது சவளையாமே

விளக்கவுரை :


2742. சவளையாம் நாகமது பின்னுமப்பா சாங்கமுடன் தானுருக்கிப் பின்னுங்கேளு
கவளமுடன் நிமிளையது களஞ்சிரண்டு கணக்காகத் தானுருக்கிக் கிராசமீவாய்
தவளமது நாகமது என்னசொல்வேன் தாக்கான முழுக்கட்டு என்னலாகும்
பவளம்போ லுருகியது வுருளைபோலாம் பாங்கான நாதத்தின் பான்மையாமே

விளக்கவுரை :

[ads-post]

2743. பாண்மையாம் நாகமதை கொடுக்குமார்க்கம் பாகமுடன் சொல்லுகிறேன் பண்பதாக
மேன்மையாய் செம்பதுவை தகடதாக்கி மிக்கான செம்புக்கு கெந்திநாலு
மான்மையாய் பழச்சாற்றால் அரைத்துமைபோல் மயங்காமல் தகட்டுக்குப் பூசிப்போடு
கான்மையுடன் கரியோட்டில் காய்ச்சிப்போடு களிம்பான செம்பதுவும் கட்டிப்போமே

விளக்கவுரை :


2744. போமேதான் செம்பதுவும் வூரலேகி பொங்கமுடன் வர்ணமது சிவப்புமெத்த
நாமேதான் சொன்னபடி நாகந்தன்னை நாட்டடா செம்புக்கு நாலுக்கொன்று
வேமடா தானுருக்கி எடுத்துப்பாரு மிக்கான செம்பதுவும் மாற்றுகாணும்
தாமேதான் மாற்றதுவும் ஏழதாகும் தனியாக சீனமது பிடிக்குந்தானே  

விளக்கவுரை :


2745. தானேதான் தகடடித்துப் புடத்தைப்போடு தனியான செம்பதுவும் மூட்டங்காணும்
மாணேகேள் திரைசவுடு களிம்போடூரல் மார்க்கமுடன் சவளையது எல்லாம்போகும்
தேனேதான் யினியதிகம் வூட்டம்காய்ப்பு திகழான புடநயப்புகரகரப்பு
ஏனேதான் இத்தனையும் பொருந்திநிற்கும் எழிலான பொன்னதுவும் பிறவியாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar