2636. உண்டான விருட்சமது
என்னசொல்வேன் உத்தமனே கானகத்துஜோதியப்பா
திண்டான மரமதுதான்
ரிஷிகள்பக்கம் திறளுடனே யம்மரமும் மெத்தவுண்டு
செண்டான புஷ்பமது நீலவண்ணம்
ஜெகஜோதி நீலமப்பா சொல்லப்போமோ
வண்டான வண்டுகள்தான்
கூட்டம்பாரு மகத்தான மரத்தினிட மேலேதாமே
விளக்கவுரை :
2637. தானான வண்டதுவுங்
கீதம்பாடும் தாக்கான கீதமது ஓசைகாட்டும்
கோனான குருநாதர்
சித்தர்தாமும் குடியிருப்பு எந்நேரம் விருட்சந்தன்னில்
தேனான முனிகூட்டம்
மெத்தவுண்டு தெள்வான கானகத்தில் விருட்சந்தன்னை
பானான பலரிஷியுங்
கண்டுதேர்ந்து பாரினிலே சித்தர்களுக் குரைத்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
2638. உரைத்தாரே சித்தர்களுங்
கண்டுதேர்ந்து உத்தமனே முனிகளுக்க உரைத்தார்தாமும்
நிறைத்தாரே ஜோதியின்தன்
மகிமையெல்லாம் நீனிலத்தில் கண்டரிந்ரு வுளவுசொன்னார்
வரைத்துமே சித்தர்களும்
கண்டாராய்ந்து வளமுடனே மையொன்று செய்தார்பாரு
முறைப்படியே மையதனை
சொல்லக்கேளு உத்தமனே மாணாக்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
2639. தானான வின்னமொரு
கருமானங்கேள் தயவுடனே சொல்லுகிறேன் மைந்தாபாரு
கோனான கமலமுனி சொல்லவில்லை
குவலயத்தில் சித்தரகளும் அனேகஞ்சொன்னார்
வேனான வெந்நூல்போல்
யாருஞ்சொல்வார் தேசத்தில் மானிடர்க்கு தெளியாய்ச் சொன்னேன்
யானான விருட்சத்தின்
பட்டைதானும் பாகமுடன் கொண்டுமே தயிலம்வாங்கே
விளக்கவுரை :
2640. வாங்கவென்றால் தயிலமது சொல்லக்கேளு வாகான மரவெட்டை சமனதாக
தூங்கியே திரியாதே மன்னாபாரு
துறையோடு முறையோடு செப்பக்கேளு
வாங்கியே குழித்தயிலம்
இறக்கிக்கொண்டு மார்க்கமுடன் அதிலரைக்க விபரங்கேளு
ஏங்கியே போகாமல் தயிலந்தன்னை
என்மகனே புழுகோடு உரமுங்கூட்டெ
விளக்கவுரை :