போகர் சப்தகாண்டம் 2646 - 2650 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2646 - 2650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2646. உண்மையாம் இன்னமொரு கருமானங்கேள் உத்தமனே சொல்லுகிறேன் மைந்தாகேளு
தன்மையாம் மையதனையெடுத்துக்கொண்டு தகைமையுடன் புருவத்தில் மைதான்தீட்டி
கண்மையுடன் வாகாஷம் பார்க்கும்போது கனிவாக வேழுமண்டலமுந்தோன்றும்
பன்மையாம் ஆகாஷவதிசயங்கள் பாங்குடனே தான்தெரியும் பாருளோர்க்கே

விளக்கவுரை :


2647. பாரிலே வதிசயங்கள் காணலாகும் பரிதிமதி வருந்ததிகள் பார்க்கலாகும்
சீருடனே சத்தலோகங்களெல்லாம் சிறப்புடனே கண்ணற்கு தோற்றுங்கண்டீர்
தாருடனே இதிகாசவித்தையெல்லாம் தாரிணியில் எந்நாளும் பார்க்கலாகும்
கூருடனே காலாங்கிநாதர்பாதம் குறிப்புடனே யான்வணங்கி பாடினேனே

விளக்கவுரை :

[ads-post]

2648. கூறினேன் பலநூலுங் கண்டாராய்ந்து அப்பனே சுளுக்குமுதல் வுளவுபார்த்து
தேறினேன் கைபாகம் செய்பாகந்தான் தெளிவாகக் கண்டறிந்து இந்நூல்தன்னை
மாரியே பிழைப்பதற்கு வழியுஞ்சொன்னேன் மகத்தான வேதையிது துறையுஞ்சொன்னேன்
மீறியே போகாமல் விதியுஞ் சொன்னேன் மிக்கான காண்டமேழாயிரந்தானே

விளக்கவுரை :


2649. தானான காண்டமேழாயிரந்தான் தாக்கான கருக்குருவுங் காணலாகும்
பானான மார்க்கமுதல் அறியலாகும் பாலகனே இந்நூல்போல் ஆருஞ்சொல்லார்
தேனான இந்நூல்தான் குருநூலாகும் தேர்ந்தெடுத்தேன் காண்டமது சத்தகாண்டம்
மானான மனோன்மணியாள் தேவிதானும் மகிழ்ச்சியுடன் தான்கேட்டு மகிழ்ந்திட்டாளே

விளக்கவுரை :


2650. மகிழ்ந்ததொரு சாதிலிங்க மின்னம்பாரு மகத்தான லிங்கமொரு கட்டிவாங்கி
தகிழ்ந்ததொரு கட்டிக்கு கடகங்கேளு தாக்கான தாளகமுஞ்சிலையுங்கெந்தி
நெகிழ்ந்ததொரு யெரிகாலன் பாலாலாட்டி நேர்மையுடன் தானரைப்பாய் ஆறுசாமம்
மகிழ்ந்துமே தானரைத்துக் கவசஞ்செய்து மார்க்கமுடன் சீலையது வலுவாய்ச்செய்யே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar