போகர் சப்தகாண்டம் 2641 - 2645 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2641 - 2645 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2641. கூட்டியே சூதமுடன் குழியானைக்கண் கொற்றவனே கரும்பூனை கண்ணுதானும்
மாட்டியே தேவாங்கு கண்ணும்கூட்டி மயங்காமல் சுழல்வண்டு தானுஞ்சேர்த்து
தாட்டிகமாய் கஸ்தூரி பூரந்தானும் தான்கலந்து தயிலமதி லரைப்பாயப்பா
வாட்டமுடன் தானரைக்க மைபோலாகும் மன்னவனே மைபோலே யாகும்பாரே

விளக்கவுரை :


2642. பாரேதான் கையெடுத்து பதனம்பண்ணு பாகமுடன் போக்குவகை சொல்லக்கேளு
நேரேதான் மையதனைக் குன்றிதானும் நேர்மையுடன் உள்ளங்கை தன்னில்வைத்து
தீரேதான் மனோன்மணியை தியானித்தேதான் திறமுடனே மையதனைப் பார்க்கும்போது
ஊரேதான் பூமிதளமுள்ளதெல்லாம் உத்தமனே கண்ணுக்குத் தோற்றுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2643. தோற்றமுடன் மையதனைப் பார்க்கும்போது தோன்றுமே பாதாள நிதிகளெல்லாம்
வேற்றமையாய் காண்பிக்கும் நிதிகளப்பா வெவ்வேறாய் பிரிவுமுதல் வுளவுகாட்டும்
போற்றமுடன் மையதனை லாடமீதில் பொங்கமுடன் தான்தீட்டி வருவாயானால்
ஏற்றபொருள் உந்தனுக்கு கண்ணிற்றோன்றும் என்மகனே புத்தியுள்ளான் செய்வான்தாமே

விளக்கவுரை :


2644. தாமான மையதனை லாடம்பூண்டி தாரணியில் ராசரிடஞ் சென்றாயானால்
காமான மாகவல்லோ வுந்தனுக்கு கடாட்சித்து மரியாதை யாவுஞ்செய்து
வேமான மாகவல்லோ நிதியுந்தந்து விருப்பமுடன் சோடசோ உபாரஞ்செய்து
தீமானமாகவல்லோ சதாகாலந்தான் திகழுடனே யேமனுக்கு முன்னிற்பாரே

விளக்கவுரை :


2645. நிற்கையிலே வுந்தனுக்கு வசியமாகி நேர்மையுடன் சரிபீடம் தான்கொடுப்பார்
வற்கமுடன் கேட்டதெல்லாம் தான்கொடுத்து வாகுடனே நாடுவளம் பூமியீவார்
துர்கைமுதல் காளிபலபிடாரியாவும் துப்புரவாய் உந்தனுக்கு நடுங்கும்பாரு
அற்பமென்று நினையாதே மையின்வேகம் அப்பனே நாமுரைத்தோம் உண்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar