போகர் சப்தகாண்டம் 2946 - 2950 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2946 - 2950 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2946. கெட்டுமே போனாலும் போவதன்றி கெடியான பாஷாணமார்க்கந்தன்னை
தோட்டுமே தானஆடி மருந்துக்கீய தோராயமாகவல்லோ முழுதும்கெட்டு
வட்டமுடன் நோய்யுகலும் பேரண்டமாகி மானிலத்தி லிறந்தவர்கள் கோடாகோடி
மட்டமென்ற மருந்துகளும் செய்துவல்லோ மன்னவரும் பயித்தியங் கொண்டேகினாரே

விளக்கவுரை :


2947. ஏகவென்றால் பாவமதுவதிகமாகி எழிலான நோயதுவும் சொல்லப்போமோ
பாகமுடன் செய்பாகம் கெட்டலைந்து பாங்குடனே சாத்திரமும் பொய்யதாகி
தாகமுடன் பாஷாணவீறினாலே தாரிணியில் சடலமது இழந்தாரங்கே
மேகமென்ற மருந்தினது வேகத்தாலே மேனியெல்லாம் புண்ணாகி ரோகமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

2948. ஆச்சுப்பா தட்சணாமூர்த்தி செய்த அரும்பவத்தை எமதர்மராஜன்தானும் 
மாச்சலுடன் கண்டறிந்து மூர்த்தியார்க்கு மகாதீர்ப்பு கொடுப்பதற்கு மனமுமானார்
பூச்சலுடன் சாத்திரத்தைக் கெடுத்ததாலே புண்ணியனே வுந்தனுக்கு சொற்பதண்டம்
தீச்சலுடன் சிவயோகி ரிஷிகளுக்கு சிவாலய மடபதிக்கு காவல்தானே

விளக்கவுரை :


2949. தானான காவலது இருக்கவென்று தன்மையுடன் எமதர்மராஜன்தானும்
கோனான தட்சணாமூர்த்தியார்க்கு கொடுத்தவசி முனியோர்க்கு வாளதாக
பானான பரமசிவன் பட்சத்தாலே பாலித்தார் எந்நாளும் வைகுண்டத்தில்
தேனான தட்சணாமூர்த்தியாரும் தேவனிட கோட்டைக்குள் ளிருந்திடாயே

விளக்கவுரை :


2950. இருந்தாரே கைலகிரி வைகுண்டத்தில் எழிலாகச் சுவாமிகட்குத் தொண்டனாகி
பொருந்தவே யவர்களீடம் பூசித்தேதான் பொங்கமுடன் சதாகாலம் வைகுண்டத்தில்
திருத்தமுடன் தாமிருந்தார் தட்சணாயன் தீரமுடன் கதைதனையே செப்பவென்றால்
வெரித்திடவே லோகத்துமாண்பரெல்லாம் வெறும்பொய்யா மென்றுசொல்லி மேவுவாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar