2656. நளினமாங் கவுசையொடு மேகம்போகும் நாட்பட்ட சுரமுதலும் நாடாதப்பா
நளினமுடன் முறைக்காய்ச்சல்
கத்தியோடும் கபாலவலி முகசன்னி காடேபோகும்
மளினமதாய் இப்பாகம்
யாருஞ்சொல்லார் பாரினிலே சித்தர்களும் முனிவர்தாமும்
மளினமுடன் பலநூலுங் கண்டாராய்ந்து
மார்க்கமுடன் பாடிவைத்தேன் காண்டமேழே
விளக்கவுரை :
2657. ஏழான காண்டமது பெருநூலாகும்
என்மகனே இந்நூல்போல் ஆருஞ்சொல்லார்
வாழான நூல்களெல்லாம்
பார்த்துமென்ன பார்த்துமே வுள்ளுளவு மறிந்துமென்ன
தாழான பெருநூலேழாயிரத்தில்
தாரிணியிலுள்ளதொரு பொருள்களெல்லாம்
நீழான நோயறிந்து
கண்டாராய்ந்து நேர்மையுடன் பாடிவைத்தேன் பெருநூலாமே
விளக்கவுரை :
[ads-post]
2658. பெருநூலாம் இன்னமொரு
கருமானங்கேள் பெருமையுடன் மாணாக்கள்பிழைக்கவென்று
கருவான பிரமதண்டு சாறுவாங்கி
கவனமுடன் தானிடித்து பிழிந்துகொண்டு
பருவான லிங்கமதுபலமும்
பாகமுடன் சுறுக்கதுதான் எட்டுசாமம்
கருவான சட்டிதனில்
கட்டிவைத்து சாங்கமுடன் சுறுக்கதுதான் தாக்கிப்பாரே
விளக்கவுரை :
2659. தாக்கினபின் கட்டிதனை
எடுத்துப்பாரு தகைமையுள்ள கட்டியது இருகிக்காட்டும்
நோக்கமுடன் கட்டிக்குப்
பின்னுமந்த நுணுக்கமுள்ள மூலிதனைக் கவசஞ்செய்து
பார்க்கவே சீலையது வலுவாய்ச்
செய்து பாகமுடன் ரவிதனிலே காயவைத்து
நோக்கமன்றி திரியாமல்
மைந்தாகேளு சுந்தரனே மணல்மறைவிற் புடத்தைப்போடே
விளக்கவுரை :
2660. போடவே புடமதுவு மாறிப்பாரு பொங்கமுடன்
கட்டியது வுருக்குபோலாம்
நீடவே கட்டிதனைப் பதனம்பண்ணு
நீடான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
கூடவே குருவதுதான்
வுருக்குதன்னில் குமுறவே தான்கொடுத்து வூதிப்போடு
ஓடவே செம்பதுவும் ஓடிப்போக
வுத்தமனே கரியோட்டி லூதிப்போடே
விளக்கவுரை :