போகர் சப்தகாண்டம் 2496 - 2500 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2496 - 2500 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2496. கருவான மேல்வட்டஞ் சக்கரத்தில் கடினமுடன் ஆலையதுவோடிப்பாயும்
திருவான வண்டலது மேலேதானும் தெளிவுடனே படல்போலே சென்றுநிற்கும்
குருவான நடுமையம் சுக்கான்தானும் கொப்பனவே மேல்வட்டம் படல்தான்சாத்தும்
தருவான வண்டல்மேல் படல்தான்மூடி சார்பாக சீலையது பரவிக்கொள்ளே

விளக்கவுரை :


2497. கொள்ளையிலே மேல்சட்டம் நின்றுமூடி கொப்பனவே படலாலே யாலைசுற்றி
மெல்லவே சீலையது மேலேமூடி மேன்மையுடன் ஜலமதனைவடியச்செய்யும்
தள்ளயிலே சக்கரமாம் பலகையாலே சாங்கமுடன் வாலையின்றன் திருப்பல்காணும்
துள்ளியே திருப்பலது நின்றபோது சூட்சத்தால் காயிதமும் எடுக்கலாமே

விளக்கவுரை :

[ads-post]

2498. எடுக்கலாம் வாலைவிட்டு எடுத்தபோது எழிலான காற்றதனில் காயப்போடு
தொடுக்கவே ரவியென்ற வொளிதான்பட்டால் தோற்றமுடன் காயிதமும் வெளுப்புமெத்த
படுக்கமுட னிப்படியே யாலைதன்னால் பலபலவாங் காயிதங்கள் எடுக்கலாகும்
கொடுக்கவே வாலைகளுமனேகமுண்டு கொப்பனவேயதன்கூறு சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


2499. சொல்லவே கஞ்சிதனை மேலேபூசி சுத்தமுடன் காயிதங்கள் எடுக்கலாகும்
வெல்லவே கஞ்சியினால் வாலைதன்னில் மெருகுடனே சக்கரமாமுருளையுண்டு
புள்ளவே யுருளைக்கு பஞ்சுபூட்டி பொங்கமுடன் தோலாலே யாலையாகும்
பங்கமில்லா காயிதத்தை யாலைக்கீய பாகமுடன் பெருகுடனே தள்ளும்பாரே

விளக்கவுரை :


2500. தள்ளயிலே சக்கரமுமோடித்தானும் சாங்கமுடன் தானெடுத்து வடுக்கும்பாரு
துள்ளியே படல்தானும் மேலேயேற்றி துப்புரவா யடிவாரத்தொட்டிக்குள்ளே
மெள்ளவே கொண்டுசென்று யடுக்கிப்பின்பு மேற்புரத்தில் சட்டமென்ற
வாலையப்பா கொடிதான வாலைக்கு கூறுண்டாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar