2811. கொள்ளவென்றால்
யேமரசவெண்ணெயாச்சு தோடான குறுக்குவழி மேவலாச்சு
எள்ளளவு கோளாறு நேராதப்பா
எழிலான சூதமது மடிந்ததானால்
விள்ளவே யெவராலும்
முடியாதப்பா வீணிலே சுட்டலைந்தார் கோடாகோடி
கொள்ளகொள்ளப் பானவர்க்கு
இந்தப்போக்கு குறுதிவழி கிடைத்தாலே சித்தனாமே
விளக்கவுரை :
2812. சித்தனாய்ப் பிறந்தாலும்
பிழைக்கவேண்டும் சீரான சாஸ்திரத்தை யறியவேண்டும்
சுத்தமுடன்
தியானிபோலிருப்பான் மட்டைசுந்தரம் பேசியல்லோ மொழியுங்காணான்
நித்தமுடன் சிவயோக
நிலையில்நின்று நிர்மூடப் பயல்களுக்கு வேதஞ்சொல்வான்
கத்தனைப்போல் பிரமசிருஷ்டி
செய்வேனென்பான் காசினியில் கதைமுடிக்கும் கழுதையாமே
விளக்கவுரை :
[ads-post]
2813. ஆமேதான் புல்லறிவு வாளனானால்
அப்பனே அப்பதத்தை மனதிலுண்ணி
நாமேதான் சொன்னபடி
ரிஷிகள்பக்கல் நலமுடனே சென்றுமல்லோ நயமும்பேசி
போமேதான் காலமுதல்
வீண்போகாமல் பூவுலகில் புண்ணியனாயாவதற்கு
நேமமுடன் அஷ்டாங்க
நிலையிற்சென்று நேர்புடனே குருபதத்தை மனதிலுண்ணே
விளக்கவுரை :
2814. உன்னியே நிற்கையிலே
வாமிவந்து உத்தமனே யுந்தனுக்கு வழியுஞ்சொல்வாள்
கன்னியெனும் மஹேஸ்பரியாள்
நிற்கும்போது காவலனே கண்டுமனம் மயங்கவேண்டாம்
பன்னவே யுந்தனுக்கு
பிராணாயாமம் பாலிப்பாள் வாதமுடன் யோகமாற்கம்
சொன்னபடி தப்பாது
குறையுண்டானால் சூட்சமுடன் நீயறியுந் துரையில்நில்லே
விளக்கவுரை :
2815. நிற்கவென்றால் பதியேது
மைதானேது நிலைகெட்ட வாணவத்தை யடக்கவேண்டும்
துற்கையெனும் மந்திரங்கள்
கற்கவேண்டும் துஷ்டபூத நாக்கிறம் அகற்றவேண்டும்
சொற்களெனும் பீஜாட்சர
மந்திரத்தை துறையோடும் முறையோடும் செலுத்தவேண்டும்
கற்கடக ராசியிலே
பிறக்கவேண்டும் கன்னிதுலாம் சிம்மமென்றால் கருதுவாரே
விளக்கவுரை :