2661. ஊதினபின் எடுத்துப்பார்
என்னசொல்வேன் உத்தமனே மாற்றதுவும் ஆறுகாணும்
சாதியிலே பிறந்ததொரு
பொன்னைப்போல சட்டமுடன் தானிருக்கும் பசுமைமெத்த
வாதிகளோ யிவ்வேதை
காணப்போறார் வையகத்தில் சித்தர்செய்யும் வேதையாச்சு
மாதிகனா யிருந்தாலும்
வேதைகாண்பான் மாநிலத்தில் விட்டகுறை வாய்க்கும்பாரே
விளக்கவுரை :
2662. பாரேதான் சித்தர்களுக்
குகந்தவேதை பாராளும் ராசர்களும் மெச்சுவார்பார்
சீரேதான் இவ்வேதை சிடிகைவேதை
சிறப்புடனே நாதாக்கள் கண்டவேதை
நேரேதான் நாலுக்கோர்
தங்கஞ்சேர்த்து நேர்மையுடன் வாரடித்துப் புடத்தைப்போடு
கூரேதான் மாற்றதுவும்
எட்டதாகும் குணமான போகரிஷி கூறினாரே
விளக்கவுரை :
[ads-post]
2663. கூறவே முடியாது
லிங்கப்போக்கு கொற்றவனே சன்னிசுரம் சன்னிவாதம்
தீரவே வனுபானந் தன்னிலீய
திசைகெட்டு பிசைகெட்டு தியங்கியோடும்
மாறலென்னு முறைக்காய்ச்சல்
மதிகெட்டோடும் மயங்காதே முன்றுநாள் அருந்திபாரு
ஊரவே மேகமென்ற நீரும்போகும்
உத்தமனே சிவயோகம் வாய்க்குந்தானே
விளக்கவுரை :
2664. தானான சிவயோகம் வாய்க்கும்போது தாழ்வான தேகமது கற்றூணாகும்
வேனான வாசியது
கீழ்நோக்காகும் வேகமுடன் நரம்பெல்லாம் வலித்துக்காட்டும்
கோனான யெனதையர்காலாங்கிநாதர்
குருபதத்தைத்தான்வணங்கி சத்தகாண்டம்
தேனான மொழிபோல
தேர்ந்தெடுத்து தேவிபதமடிபணிந்து பாடினேனே
விளக்கவுரை :
2665. பாடினேன் இன்னமொரு
மார்க்கங்கேளு பாலகனே என்மக்கள் பிழைக்கவென்று
நீடியே பலநூலுஞ்
சுளுக்கறிந்து நேர்மையுடன் யாமுரைத்த தயிலமப்பா
தேடியே பூவரசன் சேர்தானொன்று
சிறப்பான கெஞ்சாவின் விரைதானப்பா
வாடியே யலையாதே
கிழங்குசொல்வேன் வளமான தாமரையின் கிழங்குதானே
விளக்கவுரை :