போகர் சப்தகாண்டம் 2391 - 2395 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2391 - 2395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2391. தானான வித்தையிது சொல்வேன்கேளும் தகைமையுள்ள இரும்பினிலே காந்தஞ்சேர்த்து
பானாகத் தானுருக்கிக் கம்பியாக்கி பாலகனே சிறுகம்பி நூல்போலாக்கி
வேனாக கூண்டுதான் வடிதான் பத்து விருப்பமுடன் நீளமது வடிதான்பத்து
மானாக நாற்சதுரமாக்கியல்லோ மார்க்கமுடன் கம்பியால் கூண்டுகட்டே

விளக்கவுரை :


2392. கட்டயிலே சுற்றிலும் தூணிருத்திக் கருத்துடனே நடுக்கம்பி சதுரமிட்டு
தோட்டில் போல்தான்சமைத்து சுடர்கள் வைக்கசூட்சமுடன் கம்பிக்குள்ளேமாட்டி
சட்டமுடன் சுற்றிலும் நாற்பட்டாலே சாங்கமுடன் தானமைத்து கிளிபோல்கட்டி
திட்டமுடன் அடிவாசல் தாள்திறந்து தீர்க்கமுடன் மேல்வாசல் மூடிப்போடே 

விளக்கவுரை :

[ads-post]

2393. போட்டவுடன் கற்பூரத் தயிலத்தூட்டி பொங்கமுடன் விளக்கொளிதான் வைத்துபாலா
நாட்டமுடன் கும்மட்டம்போல் சோடித்து நயமுடனே காற்றடங்கச் செய்துபின்னும்
மூட்டமுடன் வாயுவது உள்ளேதங்கி முயற்சியுடன் மேலெழும்பிப் போகும்பாரு
வாட்டமுடன் கூட்டமதுதான் ஆகாஷத்தில் வளமையுடன் போவதற்குத் திறமுண்டாச்சே

விளக்கவுரை :


2394. உண்டான போகையிலே காற்றினாலே ஓகோகோ செல்லுமது வாகாயத்தில்
கண்டாலே மானிடர்கள் காணும்போது கைலாசம் மேருவரை செல்லும்பாரு
அண்டமுடன் ஆகாசமேலேநோக்கி அதற்கப்பால் போகும்வழி காணார்பாரு
விண்டலத்தின் விந்தையிது மாச்சரியமாகும் வெட்டவெளி வித்தையிது சூட்சம்பாரே

விளக்கவுரை :


2395. சூட்சமாம் கூண்டுவித்தை துலைதூரமோடும் தொல்லுலகில் கருவாளிகாண்பான்பாரு
மாட்சியுடன் வாயுவினால் பிறந்தவித்தை மானிலத்தில் மன்னவர்கள் மயங்கும்வித்தை
தாட்சியுடன் பாலரெல்லா மாடுவித்தை சதாகால மாடுதற்கு வினோதவித்தை
சூட்சியுட னிரக்காலமாடும்வித்தை மேன்மையுடன் போகரிஷி புகன்றிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar