போகர் சப்தகாண்டம் 2761 - 2765 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2761 - 2765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2761. மூடவே குப்பிக்குச் சீலைசெய்து மூர்க்கமுடன் தான்செய்து ரவியில்வைத்து
நாடவே தளவாயாஞ் சட்டிதன்னில் நலமுடனே பூமணக் கீழேகொட்டி
தேடவே சட்டிமையந்தன்னில் தெளிவாகக் குப்பிநடுமையம்வைத்து
கூடவே மணலதனை மேலேகொட்டி குப்புறவாய் மேல்சட்டி சீலைசெய்யே

விளக்கவுரை :


2762. செய்யவே வானுகையாம் அடுப்பில்தானும் சிறப்பாகத் தீமூட்டி எரிப்பாயப்பா
பையவே வெண்சாம மெரித்தபோது பாலகனே செந்தூரம் அருணன்போலாம்
தொய்யவே சூதமது செந்தூரத்தால் தொடரவாம் கோடிமுறை வேதையாவும்
செய்யவே செந்தூரம் பதனம்பண்ணு செய்பாகம் கைபாகம் முறைவிடாதே

விளக்கவுரை :

[ads-post]

2763. முறையோடு செய்தாக்கால் எல்லாஞ்சித்தி முறைதப்பி செய்தாலோ எல்லாமோசம்
கரையேற வேண்டுமானால் சூதம்பாரு கண்கெட்ட வாதியானால் சூதந்தள்ளு
பரையான சூதமது ராசபோசன் பாரினிலே சூதம்விட்டால் வாதம்போச்சு
நிறையோடு சாத்திரங்கள் வுளவாராய்ந்து நிற்பவனே சித்தர்களி லொருவனாமே

விளக்கவுரை :


2764. ஒருவனாம் பேருள்ளான் ராசியுள்ளான் உலகத்தில் அல்லார்க்கும் வாய்க்குமோசொல்
பெருமையுடன் வீண்பேச்சு மெத்தபேசி பேருலகில் நாய்போல பினத்துவார்கள்
அருமையது கண்டறிய மாட்டாரப்பா அப்பனே கரைகண்ட முனிதானென்பான்
வெருமையாய் வாய்ப்பினத்தல் மிகவும்பேசி வெகுகோடி மாண்டார்கள் மண்ணில்தானே

விளக்கவுரை :


2765. தானான செந்தூரம் கொடுக்குமார்க்கம் சாங்கமுடன் சொல்லுகிறேன் தன்மையாக
வேனான வெள்ளியது வாறதாகும் வேகமுடன் செம்பதுவும் நாலதாகும்
கோனான மூசைதனி லுருக்கிக்கொண்டு குருதனையே தான்கொடுத்து வூதிப்போடு
தேனான கரியோட்டி லூதும்போது தெளிவான பசும்பொன்னாயாகுந்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar