2596. தானான வுப்புதன்னைக்கொண்டபோது தாக்கான தேகமது கற்றூணாகும்
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் குருபதத்தை யான்வணங்கி பாடிவைத்தேன்
தேனான வின்னூல்தான்
குருநூலாகும் திரட்டிவைத்தேன் ஏழாயிரங்காண்டமப்பா
பனான பராபரியை மனதிலுண்ணி
பாடிவைத்தேன் சீனபதிதேசத்தார்க்கே
விளக்கவுரை :
2597. தேசமென்றால் தேசமது
சொல்லப்போமோ தேசத்தில் சீனபதிக்கிணையீடுண்டோ
மோசமில்லை யவரிடத்தில்
மாந்தரப்பா முடிசாய்ந்த மன்னர்முதல் குருக்கள்தாமும்
பாசசுடன் பட்சமுண்டு
வருளுமுண்டு பாரினிலே யவர்க்கீடு சொல்லப்போமோ
நேசமுடன் சத்தியத்தைக்
கைவிடாதார் நீணிலத்தில் சீனபதி மாந்தர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
2598. தாமான இன்னமொரு சூட்சம்பாரு
தண்மையுடன் சொல்லுகிறோம் மைந்தாகேளு
கோமான கெந்தகமும்
சூதந்தானும் கொடிதான சாரமுடன் நிமிளைதானும்
காமான காரமுடன் சீனந்தானும்
கருவான கண்டருட தொட்டிதானும்
நாமான சரக்கெல்லாமஃ
சரியாய்த்தூக்கி நளினமுடன் தானரைப்பாய் பழச்சாற்றாலே
விளக்கவுரை :
2599. அரைக்கையிலே
நாற்சாமமரைத்தபோது அப்பனே மெழுகதுபோலாகும்பாரு
திரைக்கவே கலசமென்ற
பாண்டந்தன்னில் திறமுடனே தானடைத்து மைந்தாகேளு
கரைப்புடனே மேலதனில்
ரவியால்மூடி களிப்பென்ற மண்ணதனால் சீலைசெய்து
முறைப்படியே கவுதாரி
புடத்தைப்போடு மோசமில்லை பதங்கமது ஏறும்பாரே
விளக்கவுரை :
2600. பாரேதான் பதங்கமது
என்னசொல்வேன் பாரினிலே கருவாளி செய்வான்பாரு
நேரேதான் பதங்கமதை
குழுக்கல்லிட்டு நினைவாக வந்திடைக்கு கெந்திசேர்த்து
கூரேதான் வந்திடைக்கு
பாதிசூதம் குறிப்பாக தானரைப்பாய் செயநீர்தன்னால்
சாரேதான் மெழுகுபோல்
அரைத்துப்பின்பு சட்டமுடன் பின்னுமந்த கலசமேற்றே
விளக்கவுரை :