2751. ஆச்சப்பா சுன்னமது
என்னசொல்வேன் அப்பனே கண்கொள்ளா வேதையாச்சு
மாச்சென்ற சுன்னமதை
மதியிற்றாக்கும் மயங்காதே பத்துக்கொன்று போடு
பாச்சலுடன் வெள்ளியது
எட்டுகாணும் பாகமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு
காச்சலுடன் கலாய்ப்புக்கு வறுதிதங்கம்
கருவாளி கண்டாலே விடுவார்தாமோ
விளக்கவுரை :
2752. தாமான வின்னமொரு பாகங்கேளு
தாக்கான செம்பென்ற ரேக்குதானும்
காமான வேஷங்கள் பூணுவோர்க்கு
கருவான சீனபதிரேக்குதானும்
வேமான மானதொரு
காந்தஞ்சேர்த்து விருப்பமுடன் காரமது கூடச்சேர்த்து
பாமான வெள்ளியது சரிநேரொக்க
சாதகமாய் தான்சேர்த்து வுருக்கிடாயே
விளக்கவுரை :
[ads-post]
2753. உருக்கவே செம்பதுவும்
வொன்றாய்ச்சேர்ந்து உத்தமனே காந்தத்தின் சத்துசேர்த்து
பெருக்கமுடன் வெள்ளியது
வரணமேறி பேரான மாற்றதுவும் மிகவுமாகி
செருக்கமுடன் வாவியது
கட்டிப்போகும் சிறப்பான வாணிக்கு வாறேகாலாம்
சுருக்கமுடன் பத்துக்கு
ரண்டுதங்கம் தாக்கவே மாற்றதுவும் ஏழதாமே
விளக்கவுரை :
2754. ஏழான மாற்றதுவும்
மிகுதிகாட்டும் எழிலான பொன்னதுவும் பசுமைமெத்த
காழான பிறவியது எண்ணலாகும்
கருவான வித்தையிது சித்தர்வேதை
நாழான நாதாக்கள்
செய்யும்வேதை நளினமுடன் யான்சொன்னோம் மாண்பருக்கு
கூழான வேதையிது யல்லகண்டீர்
கொற்றவனே போகரிஷி கூறினோமே
விளக்கவுரை :
2755. கூறினோம்
சீனபதிவேதைமார்க்கம் குவலயத்தில் யாரேனும் கண்டதுண்டோ
மாறினதோர் கருமான
வுளவுமார்க்கம் மகத்தான சுளுக்குமுதல் கருவுவேதை
தேறினதோர் கண்கண்ட
வேதையாவும் திரட்டினேன் பூதல்த்தார்க்கென்றுசொல்லி
ஆறினங்கள் பிறவிமுதல்
வைப்பெல்லாந்தான் அப்பனே யாமுரைத்தோம் வுளவுபாரே
விளக்கவுரை :