போகர் சப்தகாண்டம் 2576 - 2580 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2576 - 2580 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2576. ரண்டான சாமமது வரைத்தபோது எழிலான பில்லையது தட்டிமைந்தா
திண்டான ரவிதனிலே காயவைத்து திறமாக ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
கண்டான புதும்வராட்டிநூறு கவனமுடன் போட்டுவர செந்தூரிக்கும்
தண்டான புடமதுவும் பத்துபோடு தாக்கான செந்தூரம் சிவப்புகாணே

விளக்கவுரை :


2577. காணவே செந்தூரம் என்னசொல்வேன் கடிதான ரசமதுதான் மடியுமட்டும்
தோணவே புடமதுவும் செப்பக்கேளு துறையுடனே சாரமென்ற செயநீர்தன்னால்
மாணவே தானரைப்பாய் ஆறுசாமம் மார்க்கமுடன் பில்லைதட்டி காயவைத்து
ஊணவே ஓட்டிலிட்டு சீலைசெய்து உத்தமனே நூறெருவிற் புடந்தான்போடே

விளக்கவுரை :

[ads-post]

2578. போட்டவுடன் செந்தூரம் அருணன்போலாகும் பொங்கமுடன் இதிற்பத்து புடந்தான்போடு
நீட்டமுடன் செந்தூரங் குற்றம்நீங்க நிலையான சுல்லிதனை யடைக்கும்பாரு
தாட்டிகமாய் பரிட்சிக்க விபரங்கேளு தகைமையுடன் மண்பாண்டந் தன்னைவாங்கி
மாட்சிமையாய் பாண்டத்தில் துவாசரமிட்டு மாட்டடா தொட்டியென்ற பாண்டம்வையே

விளக்கவுரை :


2579. வைக்கவே தொட்டியென்ற பாண்டந்தன்னில் மன்னவனே சில்லியென்ற பாண்டந்தன்னை
வைக்கவே ஜலம்விட்டு செந்தூரத்தை மயங்காமல் பணவிடைதான் பாண்டத்துள்ளே
வைக்கவே செந்தூரம் போட்டபோது வளமான துவாரமது வடையும்பாரு
வைக்கவே செந்தூரம் பரிட்சைகாட்டி மாட்டடா ரோகமென்ற பிழிவுதானே

விளக்கவுரை :


2580. இனிவான நீரிழிவு மதுமேகந்தான் எழிலான மேகமது இருபத்தொன்றும்
பழியாமல் அனுபானம் எதிலுண்டாகும் பறக்குமடா ரோகமென்ற கசரோகம்போம்
வழியான செந்தூரம் பரிட்சைகாட்டும் மயங்காமல் ராசரிடம் சென்றுநீயும்
சுழியான சுழிமுனையும் வாசிப்பார்த்து சுந்தரனே வடகலையில் சென்றிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar