2526. கேளேதான் நற்கையான்
சாமம்நாலு கெடியான பொற்கையான் சாமம்நாலு
பாலேதான் போகாமல்
அரைப்பாயப்பா பாகமுடன் குலாமல்லி சாற்றினாலே
தாளவே தக்காளிச் சாற்றினாலே
சாங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
மாளவே புளியாரை சாமம்நாலு
மயங்காமல் தானரைப்பாய் மகிபாதானே
விளக்கவுரை :
2527. தானேகேள் நீலியின்றன்
சாமம்நாலு தகுவான வாதொண்டைச் சாமம்நாலு
மானேகேள் பொன்னாதரைச்
சாமம்நாலு மார்க்கமுடன் பாற்சுரண்டி சாமம்நாலு
தேனேகேள் மலைத்தேனு
சாமம்நாலு தெளிவான நீர்மிட்டான் சாமம்நாலு
வேனான கவுதும்பை சாமம்நாலு
விருப்பமுடன் தானரைப்பாய் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
[ads-post]
2528. பண்பான தானிச்சார் சாமம்நாலு
பாங்கான கற்றாழை சாமம்நாலு
தின்பான கொள்ளிலைச்சார்
சாமம்நாலு திடமான ஈருள்ளிச் சாமம்நாலு
நண்பான வரிக்குமட்டி
சாமம்நாலு நலமான பேய்க்குமட்டி சாமம்நாலு
கண்பான கருப்பன்சார்
சாமம்நாலு கதிரான மேனிச்சார் சாமம்நாலே
விளக்கவுரை :
2529. நாலான முசுக்கைச்சார்
சாமம்நாலு நலமான மாதுளையின் சாமம்நாலு
காலான முருங்கைப்பூ
சாமம்நாலு கடிதான முடக்கொத்தான் சாமம்நாலு
தாலான மாந்துளிரு சாமம்நாலு
தாக்கான செந்தோன்றி சாமம்நாலு
நூலான வெந்தோன்றி சாமம்நாலு
நுணாவுடனே செம்பருத்தி சாமம்நாலே
விளக்கவுரை :
2530. சாமந்தா னரைக்கையிலே
யின்னங்கேளு சாங்கமுடன் பழச்சாறால் ஆறுசாமம்
நேமமுடன் தானரைப்பாய்
தேங்காய்ப்பாலால் நேரான வாறுவகை செயநீர்தன்னால்
தாமமுடன் யெண்சாம மரைத்தபோது
தகைமையுள்ள சரக்கெல்லா மடிந்துமல்லோ
சாமமுடன் மெழுகதுவாய்
மைபோலாகி சார்பான வெண்ணெய்போ லிருக்கும்பாரே
விளக்கவுரை :