போகர் சப்தகாண்டம் 2406 - 2410 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2406 - 2410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2406. கண்டவுடன் காலாங்கிநாதர்சாமி கருத்துடனே சமாதியிடம் சென்றபோது
அண்டமுனி ராட்சசர்கள் அசுரார்கூட்டம் அணியணியாய் வுலாகொடுத்து நின்றாரங்கே
சண்டையிடும் ராவணனார் சமாதிகண்டார் சாங்கமுடன் ரிஷிகளெல்லா மங்கிருந்தார்
தெண்டமுடன் சமாதியிடம் சென்றபோது தீரமுடன் வுளவையெல்லாம் கேட்டிட்டாரே

விளக்கவுரை :


2407. கேட்கையிலே சதகண்ட ராவணன்தான் நெடிதான சமாதியது கண்டிட்டாராம்
நாட்டமுள்ள சமாதியது நடுமையத்தில் நலம்பெறவே கோட்டைக்கு மேற்புரந்தான்
நீட்டமுடன் பன்னீருகாதமப்பா நிலையான சாமியுட கோட்டையாகும்
வாட்டமுடன் சமாதியது கிட்டப்போனார் வாகுடனே சித்தர்முனி காவல்தானே

விளக்கவுரை :

[ads-post]

2408. காவலுடன் ரிஷிகூட்ட மசுராள்தானும் காவலனார் கோட்டையது சமாதிமுன்னே
ஆவலுடன் காணவென்று போகும்போது அங்குள்ள ராட்சதர்கள சுரார்கூட்டம்
ஏவலெனும் கிங்கிலியர் ஆயிரம்பேர் எழிலான கோட்டைவழி தான்மறிப்பார்
பாவலுடன் காலாங்கி வார்த்தைகூறி பதியோக வுபாயமது கண்டிட்டாரே

விளக்கவுரை :


2409. காணவே சமாதியது மேற்புரத்தில் கனகமணி நவரத்தின சமாதிகண்டார்
வேணவே வுபசாரமுடன் காலாங்கிநாதர் விடுபட்டுச் சமாதியிடம் சென்றாரங்கே
நாணமுடன் தலைகுனிந்து வார்த்தைகூறி நலம்பெறவே சமாதியிடம் சென்றிட்டாராம்
பாணம்போ லசரீரிவாக்கியந்தான் பாரினிலே சத்தமது கேட்கலாச்சே

விளக்கவுரை :


2410. கேட்டவுடன் காலாங்கிநாதர் தாமும் கிருபையுடன் கிருபையுடன் சமாதியிடம்போகவஞ்சி
நாட்டமுடன் நடுமையம் கோட்டைக்குள்ளே நலமுடனே காலாங்கி பெருமூச்சுவிட்டு
தேட்டமுடன் ராவணனார் பாதங்காண தேர்வேந்தே எனக்குகுறைநேரலாச்சு
கோட்டமுடன் மனக்குறைகள் நேர்ந்ததென்று கூறினார் காலாங்கிநாதர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar