2941. தெளிவான சாத்திரத்தைப்
பாடியல்லோ தேசத்தில் கீர்த்தியுடன் பெயர்தான்வேண்டும்
நெளிவான நூலதனைச்
செய்யாமற்றான் நுணுக்கமெல்லா மறைபொருளாய்ச் சொன்னதாலே
ஒளியான சித்தர்முனி
தங்கள்பேரில் ஓகோகோ மோசமென்று நூலுஞ்சொல்லி
பளியான சாத்திரத்தைப்
பாடிவைத்தார் பாலருக்குப்பாபம்வந்து லபித்ததாமே
விளக்கவுரை :
2942. தாமான மச்சமுனி
தன்னைத்தானும் தண்மையுடன் வைகுண்டப்பதியிலப்பா
கோமானாம் எமதர்மராசருண்டே
கொற்றவனைத் தானழைத்துக் கொடுதானுபோனார்
பூமானின் மச்சமென்ற
முனிவர்தம்மை புகழுடனே கேட்கலுற்றார் அந்தநேரம்
வசமான மச்சமுனி கூறும்வண்ணம்
வாகுடனே கிட்டிருந்து கேட்டிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
2943. கேட்கையிலே வுத்தரவு
விடையுமில்லை கெடுதியுடன் வாக்கினைகள் கொஞ்சந்தானும்
நீட்கமுடன் தான்கொடுத்து
தீர்ப்புசெய்து நீதியுடன் எமபுரத்து வாசலுண்டே
பூட்கமல தடாகமதில்
காவல்வைத்து பொங்கமுடன் சங்கரற்கு பூசைக்கப்பா
வாட்கமல புட்பமதுதான்பரித்து
வளமுடனே தான்கொடுக்க நீதியாச்சே
விளக்கவுரை :
2944. ஆச்சப்பா யின்னமொரு
வதிசயங்கேள் அப்பனே யானறிந்த வரைக்குஞ்சொல்வேன்
வாச்சலுடன்
தட்சணமூர்த்திதன்னை வைகுண்டப்பதிதனிலே கண்டேன்யானும்
கூச்சலுடன் கிங்கிலியர்
தூதர்தாமும் குய்யோதான் முறையுமென்று வபயமிட்டு
பேச்சுடனே
தட்சணாமூர்த்தியாரை பெருமையுடன் விசாரணையில் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
2945. பார்க்கையிலே
தட்சணாமூர்த்தியாரும் பாடல்களை வெகுவாக மறைத்துப்போட்டார்
சேர்க்கமுடன் வாதத்தை
முன்பின்னாகச் செப்பினார் திரட்டுமுதல் வுளவுமார்க்கம்
மூர்க்கமுடன் மருந்துவகை
பாஷாணத்தை முன்பின்னால் பேர்மாற்றி பேருறைத்தார்
தீர்க்கமுடன் சொன்னதினால்
மாந்தர்யாவும் தேசத்தில் சுட்டலைந்து கண்கெட்டாரே
விளக்கவுரை :