2721. கோடியாஞ் சமாதிதனில்
இருந்தோர்மெத்த கூறவேமுடியாது குவலயத்தில்
தேடியே சமாதிநிலை
கண்டாராய்ந்து தெரிசனைகளில்லாமல் மாண்டார்கோடி
நீடியே சாத்திரத்தை
பாராமல்தான் நெறிதப்பி மாண்டவர்கள் கோடாகோடி
நாடியே காலாங்கிநாதர்பாதம்
நான்பெற்றேன் கோடிமுறை வுண்மைதானே
விளக்கவுரை :
2722. தாமான ராஜரெல்லாம்
தாரிணியில் தலைமாறி நூலைப்பார்த்து
சாமான கருக்களெல்லாம்
காணாமற்றான் சார்பான நூல்படிக்கே வகையுங்கேட்டு
காமான தலையேடுங்
கடையேடுந்தான் காணாமல் மதிகெட்டு மூப்பைவிட்டார்
நாமான படியாலே வுளவறிந்து
நாதாக்கள் கைமறைப்பை வெளியிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
2723. இட்டேனே யின்னமொரு
மார்க்கங்கேளு எழிலான மதிதனையே ராவிமைந்தா
சட்டமுடன் பலமதுதா
னிறுத்துகொண்டு சாங்கமுடன் கெந்தியது காலதாக
கிட்டமென்ற சிட்டமது
காலுங்கூட்டி கவனமென்ற சூதமது சரியாய் சேர்த்து
திட்டமுடன் வேங்கையது
தயிலத்தாட்டி திறமுடனே நாற்சாமமரைத்திடாயே
விளக்கவுரை :
2724. அரைத்துமே பில்லைதட்டிக் காயவைத்து அப்பனே யோட்டிலிட்டுச் சீலைசெய்து
திரைப்புடனே ரவிமுகத்தில்
காயவைத்து தீரமுடன் மணல்மறைவிற் புடத்தைப்போடு
முறைப்படியே மணலாறி
எடுத்துப்பாரு மூதண்ட செந்தூரமென்ன சொல்வேன்
குறையாமல் பத்துபுடம்
இப்படியேபோடு குறியான செந்தூரம் சிவப்புமாமே
விளக்கவுரை :
2725. ஆமேதான் செந்தூரம்
அருணன்போலாம் அப்பனே புடம்போட சிவப்புமெத்த
வேமேதான் முறையோடு
செய்தாயானால் விண்கொள்ளா வேகமது வீரங்காட்டும்
போமேதான் செந்தூரம்
வெள்ளிசெம்பில் போக்கோடு முறையோடுங் கொடுத்துப்பாரு
நாமேதான் சொன்னபடி
யோட்டில்வைத்து நலமாக வூதிடவே பசுமைதானே
விளக்கவுரை :