போகர் சப்தகாண்டம் 2826 - 2830 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2826 - 2830 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2826. பாரேதான் அயமதுவுங் களங்குமானால் பாரினிலே செம்புவித்தை நிஜமதாச்சு
சீரேதான் செம்புநிகர் வங்கஞ்சேர்த்து சீர்பெறவே கரியோட்டிலூதிப்போடு
நேரேதான் செம்பதுவு மூறலேகி நெகிழான வாதத்துக் குறுதியாச்சு
தீரேதான் வெள்ளிதனில் நாலுக்கொன்று திகழாகத் தான்கொடுத்து வுறுக்கிப்பாரே

விளக்கவுரை :


2827. உறுக்கையிலே மாற்றதுவும் ஆறேகாணும் உத்தமனே வயச்சவளை என்னவாகும்
செருக்கமுடன் தங்கமது நாலுக்கொன்று சேரவே தான்கூட்டி வுருகித்தீரு
பெருக்கமுடன் வாரடித்து புடத்தைப்போடு பேரான தங்கமது வர்ணமாகி
குருக்களுடன் மாற்றதுவும் எட்டேகாலாம் குருவான வாக்கதுவும் மெய்யாங்காணே

விளக்கவுரை :

[ads-post]

2828. காணவென்றால் உந்தனுக்கு வருமைமீறி னகடந்தனுக்கு முப்பிணிநேர்ந்தபோது
நாணவே மச்சமடம் பயிர்ப்புதானும் நளினமுடன் உந்தனுக்கு நேருங்காலம்
தோணவே சீவனத்துக் கில்லாவிட்டால் தேற்றமுள்ள வித்தையிது செய்துபாரு
ஈணவே சமுசாரத் தொல்லைபோக்கை எழிலான வாதத்தால் நிறுத்தலாமே

விளக்கவுரை :


2829. நிறுத்தலாம் வருமைவருங் காலந்தன்னில் நீமகரினயிவ்வேதை மாரியுண்ணு
செருக்கமுடன் கோடிவரை யுண்ணலாகும் செம்மையுடன் இச்சவளை செந்தூரத்தால்
பொருக்கமுடன் செந்தூரப் போக்குசொல்வேன் பொங்கமுடன் சவளையது ஒன்றேயாகும்
கருத்துடனே தங்கமது சரிகாலாக கருவாகத் தான்கூட்டி உறுக்கிடாயே

விளக்கவுரை :


2830. உருக்கையிலே கட்டினதோர் கெந்திதானும் வுத்தமனே கிராசமது யீவாய்பாதி
நருக்கையிலே களங்கமதை கல்வமிட்டு நாதாக்கள் சொற்படியே செப்பக்கேளும்
நடுப்பகலெனும் கையான்சார்சாமம்நாலு முசியாமல் தானரைப்பாய் மைந்தாநீயும்
வருக்கமுடன் ரவிதனிலே காயவைத்து வாகுடனே குப்பிதனி லடைத்திடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar