2626. சீலையது செய்தபின்பு
பின்னுங்கேளு செழிப்புடனே மருந்தையெல்லாம் குப்பியிட்டு
வாலையென்று மனோன்மணியை
தியானங்கொண்டு மறவாமல் மாக்கல்லு கொண்டுமூடி
பாலையுடன் சிட்டிதனில்
மணல்தான்கொட்டி பாலகனே நடுமையம் குப்பிவைத்து
ஆலையெள்ளும் வாலுகையில்
அடுப்பிலேற்றி அப்பனே எழுநாள் எரித்திடாயே
விளக்கவுரை :
2627. எரிக்கையிலே செந்தூரம்
அருணன்போலாம் எழிலான முருக்கன்பூ நிறம்போலாகும்
அரிக்கையுடன் செந்தூரம்
எடுத்துப்பாரு அப்பனே சீசாவிற்பதனம்பண்ணு
தரிக்கமுடன் வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று தயையுடனே தானுருக்கி குருவொன்றீய
பரிக்கமுடன் தானுருக்கி
வாங்கிக்கொள்ளு பாலகனே கரியோட்டி லூதிப்போடே
விளக்கவுரை :
[ads-post]
2628. ஊதிப்பார் மாற்றதுவும் ஆறுகாணும்
உத்தமனே தங்கமது நாலுக்கொன்று
சாதியாங் குங்குமப்பூ
தங்கமப்பா சார்புடனே தான்சேர்த்து வாரடித்து
வாதியாம் புடமதுவும்
மாற்றுகாணும் மகத்தான வேதையிது உறுதித்தங்கம்
பாதியாந் தங்கமது
இரண்டுக்கொன்று பாகமுடன் மாற்றாறு சேர்த்துப்பாரே
விளக்கவுரை :
2629. சேர்க்கையிலே மாற்றதுவும்
சிவந்தபொன்னாம் தெளிவான வர்ணமது வதிகங்காட்டும்
பார்க்கையிலே பிறவியது
பிறவிப்பொன்னாம் பாரினிலே நாதாக்கள் ரிஷிகள்வேதை
தீர்க்கமுடன் கருவாளி
செய்வான்பாரு தீரமுடன் மற்றொருவர் செய்வாரோதான்
மார்க்கமுடன் காலாங்கி
பாதம்போற்றி மன்னவனே பாடிவைத்தேன் போகர்தாமே
விளக்கவுரை :
2630. தாமான பாகமது யாருஞ்செய்யார்
தாரிணியில் புத்தியுள்ளவன் செய்வான்கண்டீர்
சாமான வாதவித்தை வதீதவித்தை
சாங்கமுடன் யோகவான் காணும்வித்தை
வாமான ஞானவான் சிவயோகிக்கு
வாகுடனே பலிக்குமல்லால் மற்றோர்க்கில்லை
தூமானமின்றி வார்க்குதவுமோசொல்
துப்புரவாய் வித்தையது பலிக்காதாமே
விளக்கவுரை :