போகர் சப்தகாண்டம் 2911 - 2915 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2911 - 2915 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2911. பாரேதான் பாண்டியனார் தம்மைநோக்கி பதலமுடன் வத்தாரஞ் சொல்வாரங்கே
சீருள்ள பாண்டியனே யின்னங்கேளும் சீறியே என்மீதில் கனல்தான்கொண்டீர்
நேருள்ள பாண்டியரே யின்னங்கேளும் நேர்மையுள்ள விக்கிரகம் பொன்னேயானால்
ஊருள்ள குடிபடைகள் மோசஞ்செய்வார் வுத்தமனே செம்மைநிற மாக்கிட்டேனே

விளக்கவுரை :


2912. ஆக்கினேன் தங்கமதை செம்பதாக்கி அப்பனே யொருவருந்தான் காணாவண்ணம்
நோக்கமுடன் மாந்தர்களும் காண்பாரானால் நொடிக்குள்ளே கன்னமிட எண்ணங் கொள்வார்
தாக்கவே தங்கமென்ற செம்பதப்பா தாழ்மையுடன் மோசமது செய்யவில்லை
ஏக்கமின்றி செம்புதனை கொண்டுநீரும் எழிலான கருவுதனை சோதிப்பீரே

விளக்கவுரை :

[ads-post]

2913. சோதிக்க பாரமென்ற செம்புதன்னை சுத்தமுடன் தானுருக்கி செப்பக்கேளும்
வேதிக்க கருவுதனை செய்வீர்மைந்தா விருப்பமுடன் கடுகளவுதானெடுத்து
நீதியடன் வுருக்குமுகந்தன்னிலீய நீடான செம்பதுவும் தங்கமாகும்  
பாதிமதி மணிபூண்ட பாண்டினாரே பசுந்தங்கம் பத்தரையு மாற்றுமாமே

விளக்கவுரை :


2914. மாற்றான பொன்னதுவைக் கண்டான்ராஜன் மகிமையது தெரியாமல் கோபங்கொண்டார்
கூற்றான யெமனென்று எண்ணங்கொண்டு கோலமுடி சிற்பரனே கொல்லச்சொன்னோம்
நாற்றிசையில் இவர்போலுஞ் சித்தருண்டோ நடுநடுங்கி கொற்றவனுஞ் சுற்றிவந்து
போற்றி கருவூராரைக் காணவென்று பூபால ராஜரவர் நினைத்திட்டாரே

விளக்கவுரை :


2915. நினைத்த பொழுதவ்வளவில் கருவூரார்தாம் நிமைப்பொழுதில் லாடமதில்மையேபூண்டு
சினத்துடனே மறையநின்று மன்னர்தம்மை சீரலுடன் பார்குமந்த வேளைதன்னில்
சுனைப்படியில் பாண்டியனும் நின்றுகொண்டு சுந்தரனாங் கருவூரார் எங்கேயென்ன
தனைப்புகழும் காவலர்கள் அங்கிருந்து தகமையுள்ள சிற்பரிங்கில்லை யென்றாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar